Paristamil Navigation Paristamil advert login

இந்தி சினிமாவில் என்ட்ரி ஆகும் சந்தோஷ் நாராயணன்…

இந்தி சினிமாவில் என்ட்ரி ஆகும் சந்தோஷ் நாராயணன்…

18 மார்கழி 2024 புதன் 14:04 | பார்வைகள் : 2751


தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக இருந்து வரும் சந்தோஷ் நாராயணன் இந்தி சினிமாவில் அடியெடுத்து வைக்க உள்ளார். அதுவும் அவரது முதல் படத்தில் முன்னணி ஹீரோ மற்றும் இயக்குனருடன் இணைய உள்ளதால் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பல இசையமைப்பாளர்கள் இருந்தாலும், தனது தனித்துவமான இசையால் சந்தோஷ் நாராயணன் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். அட்டகத்தி, கபாலி, ஜிகர்தண்டா வடசென்னை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இவர் இசையமைத்திருக்கிறார். குறிப்பாக கபாலி படத்தில் இவரது பின்னணி இசை அதிகம் பேசப்பட்டது.

தமிழ் சினிமாவை தொடர்ந்து சந்தோஷநாராயணன் தெலுங்கில் வெளியான கல்கி 2892 ஏடி படத்தின் மூலமாக டோலிவுட்டில் அறிமுகமானார். கல்கி படத்துடைய பாடல்கள் அதிகம் கவராவிட்டாலும் பின்னணி இசை படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

இந்நிலையில் இந்தி சினிமாவிலும் சந்தோஷ் நாராயணன் அறிமுகமாக உள்ளார். இந்தியில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் சிக்கந்தர் படத்தில் பின்னணி இசையை சந்தோஷ் நாராயணன் கவனிப்பார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்தின் பாடல்களுக்கான இசையை பிரிதம் அமைக்கிறார்

கல்கி படத்தில் சந்தோஷ நாராயணனின் பின்னணி இசை நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்தியிலும் அறிமுகமாகவுள்ளார். கடந்த ஆண்டு வெளியான ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தின் மூலம் அனிருத் இந்தி சினிமாவில் அறிமுகமானார் என்பது கவனிக்கத்தக்கது.

சிக்கந்தர் படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா இடம்பெற்றுள்ளார். சுனில் ஷெட்டி, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்துடைய ஷூட்டிங் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது.

மும்பை மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த படத்துடைய ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் சிக்கந்தர் படம் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்