உக்ரேனின் புதிய இராணுவ படைக்கு பயிற்சி வழங்கும் பிரான்ஸ்!!

19 மார்கழி 2024 வியாழன் 09:00 | பார்வைகள் : 3596
உக்ரேனிய இராணுவத்தினருக்கு பயிற்சி வழங்கப்பட்டு அவர்கள் திருப்பி அனுப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஒரு புதிய படைக்கு பிரான்ஸ் பயிற்சி அளிக்கும் என உக்ரேனிய ஜனாதிபதி Volodymyr Zelensky அறிவித்துள்ளார்.
2,300 உக்ரேனிய இராணுவ வீரர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு AMX-10 RCs மற்றும் VABs போன்ற நவீன ஆயுதங்களை பயன்படுத்த தேவையான முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த அணி பயிற்சியை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ள நிலையில், புதிய அணி ஒன்றுக்கு மீண்டும் அதே போன்ற பயிற்சிகளுடன் சில சிறப்பு பயிற்சிகளையும் பிரான்ஸ் வழங்க உள்ளதாக Volodymyr Zelensky, நேற்று டிசம்பர் 18, புதன்கிழமை அறிவித்தார்.