Paristamil Navigation Paristamil advert login

கனடா தொடர்பில் டொனால்ட்  டிரம்பின் அதிரடி அறிவிப்பு

கனடா தொடர்பில் டொனால்ட்  டிரம்பின் அதிரடி அறிவிப்பு

19 மார்கழி 2024 வியாழன் 05:26 | பார்வைகள் : 382


கனடா தொடர்பில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கனடா தற்பொழுது அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாறிக்கொண்டு வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 51 வது மாநிலமாக கனடாவை மாற்றுவது சிறந்த யோசனை என அவர் தெரிவித்துள்ளார்.

கனடாவிற்கு எதற்கு மானியங்கள் வழங்கப்பட வேண்டும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அனேகமான கனடியர்கள் அமெரிக்காவின் 51 வது மாநிலமாக கனடா மாறுவதனை விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மாறினால் கனடியர்கள் பெருமளவு வரியை சேமிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கருத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பாதிக்கும் வகையிலானது என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்