பரிசில் இருந்து சென்ற ஜேம்ஸ் பாண்ட் வில்லன்!!
23 புரட்டாசி 2018 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 18385
அமெரிக்கத் திரைப்படங்களில், கட்டுக்கடங்காத ரசிகர்களை கொண்ட ஒரு 'வெற்றித் தொடர்' தான் ஜேம்ஸ் பாண்ட் படங்கள்... ஒவ்வொரு படமும் மெஹா ஹிட் ஆகும். இதற்கு இரண்டே காரணங்கள் தான். ஒன்று நாசவேலை செய்ய முற்படும் மகா வில்லன்... இரண்டு, வில்லனை அதிரடியாக முறியடிக்கும் நமது ஹீரோ பாண்ட்... இரண்டும் தான்.
2008 ஆம் ஆண்டு, ஜேம்ஸ் பாண்ட் தனது 'குவாண்டம் ஆஃப் சோலேஸ' திரைப்படத்தில் ஒரு மோசமாக வில்லனை எதிர்கொள்கின்றார். உலகத்தில் கிடைக்கும் பெற்றோல் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால், உலகத்தை ஆட்டிப்படைக்கலாம் என வில்லன் திட்டம் போடுகிறான். அந்த ஆபத்தில் இருந்து மக்களை காப்பாற்றில் வில்லனை எப்படி போட்டு தள்ளினார் பாண்ட் என்பது தான் மீதி கதை.
இம்முறை ஜேம்ஸ்பாண்டுக்கு வில்லனாகச் சென்றவர் Mathieu Amalric. புறநகர் பரிசான Neuilly-sur-Seine இல் பிறந்து இங்கேயே படித்து, சினிமாத்துறைக்குள் வந்தவர் தான் Mathieu.
இவரின் முதல் திரைப்படம் ma vie sexuelle. முதலாவது திரைப்படத்திலேயே César Award விருது வாங்கினார்.
2007 ஆம் ஆண்டில், Le Scaphandre et le Papillon எனும் ஒரு திரைப்படத்தில் நடித்து, பல்வேறு சர்ச்சைக்குள்ளானார்.
அதன் பின்னர் ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்துக்குள் நேரடியாக நுழைந்தார். வில்லனாக இவரது உடல்மொழி, வசன உச்சரிப்பு என நடிப்பு மிரட்டலாக இருந்தது.
படத்தின் இறுதியில் ஜேம்ஸ்பாண்ட் இவரை பாலைவனத்தில் இறக்கி விட்டு, ஒரு பெற்றோல் டின்னை கையில் குடுத்து 'தாகம் எடுத்தால் பெற்றோலை குடி' என இறக்கி விட்டுச் செல்வார்...
அந்த க்ளைமேக்ஸ் வரும்வரை ஜேம்ஸ்பாண்டை வைத்து ஆட்டுவிப்பார். சமீபத்தில் வந்த ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்களில் மிக முக்கியமான வில்லன் என்றால், இவர் சட்டென ஞாபத்துக்கு வருவார்.
தற்போது தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, தனது காதலியுடன் பரிசில் வசிக்கின்றார் Mathieu Amalric!!