Brétigny-sur-Orge தொடரூந்து விபத்து! - ஒரு வரலாற்றுச் சம்பவம்!!
22 புரட்டாசி 2018 சனி 10:30 | பார்வைகள் : 18071
அன்று ஜூலை 12, 2013... வெள்ளிக்கிழமை, தேசிய நாள் விடுமுறைக்கு இரண்டு நாட்கள் மாத்திரமே உள்ளன.
பரிசில் உள்ள ஆறாவது மிகப்பெரிய தொடரூந்து நிலையமான Gare d'Austerlitz நிலையத்தில் இருந்து 16.53 மணிக்கு குறித்த 3657 இலக்கமுடைய தொடரூந்து புறப்படுகிறது.
தொடரூந்துக்குள் 385 பேர் உள்ளனர். குறித்த தொடரூந்து 20:05 மணிக்கு Limoges-Bénédictins நிலையத்தை வந்தடையும் என. அறிவிக்கப்பட்டிருந்தது.
தொடரூந்து அடுத்த சில நிமிடங்களில் Brétigny-sur-Orge (Essonne) நிலையத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த தொடரூந்துக்கு, Brétigny-sur-Orge நிலையத்தில் நிறுத்தவேண்டும் என அறிவுறுத்தப்படவில்லை. தொடரூந்தின் 'ட்ராக்' மாற்றப்பட்டதும்... ஆபத்தை உணர்த சாரதி தொடரூந்தை நிறுத்த முயல்கிறார்.
ஆனால் அது கை மீறி போகிறது...!!
மணிக்கு 137 கிலோமீட்டர்கள் எனும் உச்ச வேகத்தில் வந்த தொடரூந்து, Brétigny-sur-Orge நிலையத்தின் நடைமேடையில் வந்து பாரிய சத்தத்துடன் மோதுகிறது.
மேதிய வேகத்தில் தொடரூந்தின் பெட்டிகள் சின்னாபின்னமாகின்றன. பெட்டிகள் தனித்தனே பிரிந்து வெவ்வேறு இடங்களில் சிதறுகின்றன.
இந்த விபத்தில் 6 பேர் கொல்லபடுகின்றனர். 192 பேர் படுகாயமடைகின்றனர். கொல்லப்பட்டவர்களில் இருவர் தொடரூந்துக்குள் இருந்தவர்கள், நால்வர் நடைமேடையில் நின்றிருந்தவர்கள்.
1988 ஆம் ஆண்டு கார்-து-லியோனில் இடம்பெற்ற மிகப்பெரும் விபத்துக்கு பின்னர் பதிவாகும் மிக மோசமான விபத்தாக அது பதிவானது. இதன் விசாரானைகள் ஐந்து வருங்களின் பின்னர் இன்றும் இடம்பெற்றுக்கொண்டு தான் உள்ளன.