பரிசில் வசிப்பவர்கள் அதிகமானோர் எந்த நாட்டினைச் சேர்ந்தவர்கள்??!
21 புரட்டாசி 2018 வெள்ளி 11:30 | பார்வைகள் : 18389
பரிசில் ஒரு இடத்தில் நின்றுகொள்ளுங்கள்... ஒரு மெற்றோ நிலையம்... ஒரு பேரூந்து தரிப்பிடம் எங்கேனும்... அங்கு நின்று வருபவர்கள் போகின்றவர்கள் அனைவரையும் கவனியுங்கள்... அங்கு பயணிப்பர்களில் 30 வீதமானவர்கள் கூட பிரெஞ்சு குடிமக்கள் இல்லை...!!
அட... ஆச்சரியப்படாதீர்கள்... சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு இதைத் தான் சொல்கின்றது. பரிசுக்குள் 35 நாடுகளுக்கும் மேற்பட்டவர்கள் நிரந்தரமாக வசிக்கின்றனர். கிட்டத்தட்ட உலகின் அனைத்து மூலையிலும் இருந்து இவர்கள் வந்துள்ளனர். அல்ஜீரிவினர் மாத்திரம் ஐந்து இலட்சத்துக்கு மேல் பரிசில் வசிக்கின்றனர்.
போர்த்துக்கல், மொராக்கோ, துனிஷியா, துருக்கி, சீனா, மாலி, இத்தாலி, செனேகல், போலந்து என போய்க்கொண்டே இருக்கின்றது பட்டியல்...
இவர்கள் அனைவரும் பரிசின் எதோ ஒரு பகுதியினை ஆக்கிரமித்துக்கொண்டு வசிக்கின்றனர். சீனர்கள் ஒரு பகுதியையும், இத்தாலியினர் ஒரு பகுதியையும் ஆக்கிரமித்துள்ளனர். அங்கு அவர்களின் கலாச்சாரம், விழாக்கள் என கொண்டாடிக்கொண்டுதான் உள்ளனர்.
அத்தோடு முடிந்ததா... என்றால் இல்லை...ருமேனியா, கேமரூன், வியட்நாம், ஹைடி, கம்போடியா, சேர்பியா, ஜேர்மனி, லெபனான், பிரித்தானியா, மடகாஸ்கர், ரஷ்யா, பெல்ஜியம், பாக்கிஸ்தான், இந்தியா, இலங்கை என அந்த பட்டியல் நீள்கிறது...
2012 ஆம் ஆண்டு எடுத்த கணக்கின் படி, மேலே குறிப்பிடாத ஏனைய நாடுகளில் இருந்து (கவனிக்கவும், மேல குறிபிட்ட நாடுளை விட) 795,871 மக்கள் பரிசில் வசிக்கின்றனர். அட கொடுமையே..
அப்போ பிரெஞ்சு மக்கள் எல்லாம் எங்குதான் வசிக்கின்றனரோ??!!