சுறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களுடன் முரண்பட்ட ஜனாதிபதி மக்ரோன்!!
20 மார்கழி 2024 வெள்ளி 10:00 | பார்வைகள் : 1312
Mayotte தீவுக்கூட்டத்தினை சூறாவளி தாக்கி கிட்டத்தட்ட ஒருவாரம் ஆன நிலையில், நிலமைகளை பார்வையிடச் சென்ற ஜனாதிபதி மக்ரோனுக்கும் - தீவு மக்களுக்குமிடையே பெரும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
Brut ஆங்கில ஊடகம் வெளியிட்ட காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் Mayotte இனைச் சேர்ந்த பெண் ஒருவர், ஜனாதிபதி மக்ரோனை அருகில் வைத்துக்கொண்டு மிகவும் ஆக்ரோசமாக உரையாடினார். எங்களை பிரான்ஸ் கைவிட்டுள்ளதாகவும், போதிய உதவிகள் வழங்கப்படவில்லை எனவும் அப்பெண் தெரிவித்தார்.
அப்பெண்ணுக்கு ஜனாதிபதி மக்ரோன் பதிலளிக்கையில், "பிரிவினைவாதத்தை தூண்டும் கருத்துக்கள் தவிர்க்கப்பட வேண்டும். நீங்கள் பிரெஞ்சு மக்களாக இல்லாமல் இருந்தால், 10,000 மடங்கு அதிக பிரச்சனையை எதிர்கொண்டிருக்க நேரும்." என மக்ரோன் தெரிவித்தார்.
மேலும், "நாள் ஒரு நாள் முழுவதையும் உங்களோடு கழித்துள்ளேன். ஆனால் உங்களுடன் உரையாட நான் கத்தவேண்டி உள்ளது." என மிக கோவமாக தெரிவித்தார்.
அத்துடன், "இந்தியப் பெருங்கடலில் மக்களுக்கு இவ்வளவு உதவி செய்யும் இடம் இல்லை." எனவும் மிகவும் காட்டமாக தெரிவித்தார்.