Paristamil Navigation Paristamil advert login

ஜெர்மனி தனது நீர்மூழ்கிக் கப்பலில் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்

ஜெர்மனி தனது நீர்மூழ்கிக் கப்பலில் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்

20 மார்கழி 2024 வெள்ளி 07:53 | பார்வைகள் : 486


ஜெர்மனியிடம் ஏற்கெனவே 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. 2021-ஆம் ஆண்டு மேலும் 2 நீர்மூழ்கிக் கப்பல்களை ஆர்டர் செய்திருந்தது.

இந்நிலையில், நார்வே நாட்டுடன் கூட்டாக நவீன நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்கும் திட்டத்தில், ஜேர்மனி தனது நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்த எண்ணிக்கையை ஆறாக (மூன்று மடங்கு) அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

ThyssenKrupp Marine Systems நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

2021-ஆம் ஆண்டு ஜெர்மனி மற்றும் நார்வே நாடுகள், ThyssenKrupp நிறுவனத்துடன் 5.5 பில்லியன் யூரோ மதிப்பிலான ஆறு 212 Common Design (CD) நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க ஒப்பந்தம் செய்தன.

ஜெர்மனி மேலும் 4 கப்பல்களை சேர்த்து மொத்தம் 6 கப்பல்களையும், நார்வே இரண்டு கூடுதல் கப்பல்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது.

ThyssenKrupp, 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தயாரிப்பை தொடங்கியது. ஜேர்மனிக்கு 2032 முதல் 2037 வரை ஆண்டுக்கு ஒரு கப்பல் என்ற அடிப்படையில் வழங்கப்படும்.

அதேபோல் நார்வே, 2029-ஆம் ஆண்டுக்குள் தனது முதல் கப்பலைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

212CD நீர்மூழ்கிக் கப்பல் சுமார் 74 மீட்டர் நீளம் மற்றும் 10 மீட்டர் அகலத்துடன், 2,500 டன் கொள்ளளவை கொண்டது. இது அதற்கு முந்தைய மொடலான 212A-ஐ அடிப்படையாகக் கொண்டது.

இத்திட்டம் ஜெர்மனி மற்றும் நார்வே மத்திய ஒத்துழைப்பை வலுப்படுத்தி, ஆப்பரேஷன்களிலும் பராமரிப்பிலும் செலவை குறைத்து செயல்திறனை அதிகரிக்கும். 

இத்திட்டம் NATO உடன் இணக்கமான பாதுகாப்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்