Paristamil Navigation Paristamil advert login

Amiens Cathedral - அதிசயக்க வைக்கும் தேவாலயம்!!

Amiens Cathedral - அதிசயக்க வைக்கும் தேவாலயம்!!

17 புரட்டாசி 2018 திங்கள் 10:30 | பார்வைகள் : 18650


பிரெஞ்சுத் தேவாலயங்கள் எப்போதும் பிரம்மிக்க வைப்பவை. தேவாலயங்கள் எதுவுமே புதிதாக கட்டாட்டவை அல்ல..  எல்லாமே நூற்றாண்டுகால தேவாலயங்கள்... அப்படியான ஆலயங்களில் ஒன்று தான் Amiens Cathedral! 
 
Amiens நகரில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயம் இது.  Amiens நகரின் 'இளம் பெண்' என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அட,  Basilique Cathédrale Notre-Dame d'Amiens என்றால், அதுதானே அர்த்தம்!!
 
உலகின் மிகப்பெரிய தேவாலயங்களில் இது 19 ஆவது இடத்தில் உள்ளது. 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 7,700 சதுர மீட்டர் பரப்பளவிலும், 138.8 அடி உயரத்திலும் மிக விசாலமாக நின்றிருக்கின்றது இந்த ஆலயம். 
 
 
1981 ஆண்டில் யுனெஸ்கோவின் 'உலக பாரம்பரியம் மிக்க' இடமாக இது தேர்ந்தெடுக்கப்பட்டது. 
 
இந்த தேவாலயம் குறித்து பல பாடல்களும், காணொளிகளும் வெளியிடப்பட்டிருந்தன. சினிமாவில் கூட பல இடங்களில் வந்துள்ளது. ஒரு கட்டம் மேலே சென்று Eternal Darkness வீடியோ கேமில் கூட இந்த தேவாலயம் வந்துள்ளது. 
 
பல யுத்தங்களுக்கு முகம் கொடுத்த இந்த தேவாலயம், அதன் நினைவுகளையும் அங்கேயே தக்கவைத்துள்ளது. 
 
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பிறந்த ஊரான Amiens இனால், ஊருக்கு மட்டும் இல்லை பிரான்சுக்கே பெருமை தான்!!
 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்