Paristamil Navigation Paristamil advert login

உலகிற்கே சவாலாக அமைந்துவிட்ட காலநிலை மாற்றங்களை கட்டுப்படுத்த உங்களாலும் ஏதாவது செய்ய முடியும் !

உலகிற்கே சவாலாக அமைந்துவிட்ட காலநிலை மாற்றங்களை கட்டுப்படுத்த உங்களாலும் ஏதாவது செய்ய முடியும் !

20 மார்கழி 2024 வெள்ளி 08:05 | பார்வைகள் : 125


நினைத்துப்பார்க்க முடியாத வகையிலான சுற்றாடல் மாற்றங்களை உலகத்தார் முன்னிலையில் வரிசைப்படுத்தியே காலநிலை மாற்றங்கள் நவீன உலக சுற்றாடல் சூழமைவில் மையத்தலைப்புகளில் ஒன்றாக மாறியுள்ளது. எதிர்பாராதவகையில் காலநிலை மாற்றங்கள் தாக்கமேற்படுத்துகின்ற வேகம் மிகவும் கடுமையானதாக மாறியுள்ளமையாலேயே இந்த நெருக்கடிகளை எதிர்கொள்வதுகூட மிகவும் சவால்நிறைந்ததாகி இருக்கின்றது. அமேசன் வனாந்தரத்தில் நதியொன்று வற்றிப்போனமை, சவுதி அரேபிய பாலைவனப் பிரதேசமொன்றில் பனிப்பொழிவு இடம்பெற்றமை போன்ற அண்மைக்கால சுற்றாடல் நிகழ்வுகளின் யதார்த்தமானது அதற்கான துரித நடவடிக்கைளை மேற்கொள்ளவேண்டியதன் அவசியப்பாட்டினை மேலோங்கச் செய்விக்கின்றது.

காலநிலைப் பாங்குகளின் நீண்டகால மாற்றங்கள் இயற்கையாக இடம்பெறுகின்ற நிகழ்வுகளாக அமைந்தபோதிலும் கைத்தொழில் புரட்சியின் ஆரம்ப காலகட்டமான 1800களில் இருந்து இந்த மாற்றங்கள் மீது மானிட செயற்பாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவுவும் தாக்கமேற்படுத்துவதை இனங்காணக்கூடியதாக அமைந்துள்ளது.

இன்றளவில் கணிப்பிடப்பட்டுள்ள விதத்தில் 1800 களில் நிலவியதைவிட புவி மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை 1.2 பாகை செல்சியஸால் அதிகரித்துள்ளதோடு கடந்த தெசாப்தத்தில் அதாவது 2011 – 2020 வரையான காலப்பகுதியில் இந்த வெப்பநிலை சாதனைபடைத்தவகையில் அதிகரித்துள்ளது. தொடரந்தும் ஐக்கிய நாடுகள் தாபனம் குறிப்பிடுகின்ற வகையில் இவ்விதமாக வெப்பநிலை உயர்வடைதல் 1850 இல் இருந்து ஆரம்ப தசாப்தங்களைவிட கடந்த நான்கு தசாப்தங்களில் உயர்வடைந்துள்ளமையை இனங்காண முடிகின்றது.

காலநிலை மாற்றங்கள் உலகின் எல்லா நாடுகளையும் தீர்மானகரமான வகையில் தாக்கமேற்படுத்துகின்றதெனவும் மேற்சொன்ன மாற்றங்கள் மீது அபிவிருத்தியடைந்து வருகின்ற மற்றும் குறைவிருத்தி நாடுகளைப் பார்க்கிலும் சீனா, ஐக்கிய அமெரிக்கா, ரஷ்யா, பிறேசில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா உயர்வான பங்களிப்பினை வழங்கிவருகின்ற 06 உமிழ்பவர்களாக இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பாக கவனஞ் செலுத்தப்படுகின்ற காரணியாக அமைகின்றது.

எவ்வாறாயினும் நிகழ்காலமளவில் உலகளாவிய சுற்றாடல் நிகழ்வுகள் மாற்றங்களுக்கு உள்ளாகி தாக்கங்களை ஏற்படுத்துகின்ற புவியின் பில்லியன் கணக்கான வருடங்களுக்கு முந்திய இறந்தகாலத்தின் அமைப்பும் வழியுரிமையும் மிகவும் நேயமுள்ளதாகவும் இயற்கை நிகழ்வுகளுக்கு கட்டுப்பட்டதாக நிலவியமையும் ஆக்கமுறையான விடயமொன்றாக அமைந்தபோதிலும் மனிதனாலேயே அவனுடைய விவேகம்சார் அபிவிருத்தியின் பெறுபேறாக அறிமுகஞ் செய்யப்பட்ட கைத்தொழிலாக்க செயற்பாங்கு புவியின் இயற்கையல்லாத மாற்றங்கள்மீது தீர்மானகரமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. ஞாயிற்றுத் தொகுதியில் சூரியனில் இருந்து மூன்றாவது கோளாகவும் மிக அதிகமான அடர்த்தியைகொண்ட மற்றும் ஐந்தாவது மிகப்பெரிய கோளாகவும் புவி இனங்காணப்பட்டுள்ளது.

புவியானது மனிதனை உள்ளிட்ட மில்லியன் கணக்கான உயிரினங்களுக்கான வாழிடமாக அமைந்துள்ளது. புவியின் உயிர்க்கோளமானது ஏனைய உயிரற்ற நிலைமைகளிலிருந்தும் வேறுபடுவதோடு ஓசோன் விதானமானது புவிமீது விழுகின்ற ஊதாநிறக் கதிர்களைத் தடுத்து புவிமேற்பரப்பு அங்கிகளுக்கு சாதகமான சுற்றாடல் நிலைமைகளை உருவாக்கித் தருகின்றது.

புவிசரிதவியல் வரலாறு போன்றே புவியி்ன்பௌதீக பண்புகள் உயிரின் இருப்பிற்கு உறுதுணையாக அமைகின்றது. புவியின் இந்த நிலைமை மேலும் 500 மில்லியன் வருடங்களில் இருந்து 2 பில்லியன் வருடங்களுக்கு மேற்பட்ட காலம்வரையிலும் எதிர்பார்க்கப்படுகின்றபோதிலும் நிகழ்காலத்தின் பிரமாண்டமான சுற்றாடல்சார் நெருக்கடிகளின் மத்தியில் மேற்படி இருப்பின் இடையறாததன்மை ஒரு சவாலாக மாறியுள்ளது.

குறிப்பாக மானிட செயற்பாடுகள் காரணமாக தோன்றுகின்ற காலநிலை மாற்றங்கள் உலகளாவிய சுற்றாடல் நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது. அதன்படி பசுமைக்குடில் காப்பீடு நிகழ்காலத்தில் பிரதானமான சுற்றாடல் சிக்கலாக இனங்காணப்பட்டபோதிலும் அது சமநிலைவாய்ந்த சுற்றாடல் வழியுரிமைக்கு அத்தியாவசியமான இயற்கை செயற்பாங்காக அமைந்தது. இயற்கை பச்சை வீட்டு வாயுக்களான காபனீரொட்சைட், நீராவி, நைட்ரஸ் ஒக்சைட், மீதேன் ஆகிய வாயுக்கள் வளிமண்டலத்தின் வெப்பத்தை உறிஞ்சியெடுத்து வெப்பநிலையை சமநிலைவாய்ந்ததாக பேணிவருவது இந்த பச்சை வீட்டு காப்பீட்டு செயற்பாங்கினுள் இடம்பெறுகின்றது.

வளிமண்டலத்தின் பச்சை வீட்டு வாயுக்களின் உள்ளடக்கம் படிப்படியாக அதிகரித்துவருகின்றமை காரணமாகவே நிகழ்காலத்தில் பச்சை வீட்டு காப்பீடு புவி வெப்பநிலை உயர்வடையவும் காலநிலை மாற்றங்கள்மீதும் தாக்கமேற்படுத்துகின்ற ஒரு நிகழ்வாக இனங்காணப்படுகின்றது.

அதற்கிணங்க தற்போது காலநிலை மாற்றங்கள் மீது தாக்கமேற்படுத்துகின்ற மூலகாரணமாக அமைந்திருப்பது பச்சை வீட்டு வாயு சதவீதம் உயர்வடைகின்றமையாகும். அது புவியின் வெப்பநிலை உயர்வடைய காரணமாக அமைகின்ற அதேவேளையில் மேலும் பெரும்பாலான சுற்றாடல்சார் நிகழ்வுகளிலான மாற்றங்கள்மீது பாதகமான வகையிலான தாக்கங்களை ஏற்படுத்தவதையும் இனங்காண முடியும்.

கைத்தொழிலாக்க செயற்பாங்கில் ஆரம்பித்த துரித அபிவிருத்திச் செயற்பாங்கிற்குள் தொழில்நுட்பம்சார்ந்த, விஞ்ஞானம்சாரந்த முடிவுப்பொருட்கள், சீமெந்து, இரும்பு, உருக்கு உள்ளிட்ட கைத்தொழில் செயற்பாங்குகள், போக்குவரத்து ஊடகங்கள் போன்றவற்றில் உயிர்ச்சுவட்டு எரிபொருள் தகனம் வளிமண்டலத்தில் பச்சை வீட்டு வாயுக்களின் சதவீதம் உயர்வடைதல்மீது நேரடியாகவே தாக்கமேற்படுத்துகின்றது. உலக சனத்தொகை அதிகரிப்புடன் மாற்றமடைந்துள்ள நுகர்வுப் பாங்குகள், மட்டற்ற அவசியப்பாடுகளை பூர்த்திசெய்துகொள்ளல் முதலியவை காரணமாக கைத்தொழில் செயற்பாங்குகளினதும் விரிவடைதல் இடம்பெறுவது உயிர்ச்சுவட்டு எரிபொருள் தகனச்செயற்பாடும் அதனூடாக வளிமண்டல உமிழ்வுகள் என்றவகையில் பச்சை வீட்டு வாயுக்களின் சதவீதத்தை அதிகரித்தேயாகும்.

அத்துடன் வனாந்தரங்கள் என்பவை வளிமண்டலத்தின் CO 2 வாயுவை உறிஞ்சியெடுத்து புவியின் உயிருள்ள – உயிரற்ற வழியுமைக்கு பொருத்தமான மிகச்சிறந்த சுற்றுச்சூழலில் தாக்கமேற்படுத்துகின்ற சூழற்றொகுதியாகும். எனினும் இன்றளவில் பல்வேறு அவசியப்பாடுகளுக்காக காடழிப்பு இடம்பெற்று வருவதோடு ஒவ்வொரு வருடத்திலும் ஏறக்குறைய 12 மில்லியன் ஹெக்டெயார் காடுகள் அழிக்கப்பட்டு வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி காடுகளின் தரங்குன்றல் என்பது CO 2 சதவீதம் உயர்வடைதல்மீது தாக்கமேற்படுத்துகின்ற பிரதான காரணியாக இனங்காணப்பட முடியும்.

அதிகரித்துவருகின்ற சனத்தொகையின் உணவுத்தேவையை நிவர்த்திசெய்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விவசாய செயற்பாங்குகள் அதாவது, பயிர்வளர்ப்பிற்காக காடுகளை வெட்டவெளியாக்குதல், விவசாய இரசாயன பசளைகளை பாவித்தல், உணவு உற்பத்தி, பொதிசெய்தல் மற்றும் விநியோகித்தல் என்பவை காரணமாகவும் காபன்டையொக்சயிட், மீதென் போன்ற பச்சை வீட்டு வாயுக்கள் அதிகரித்தல் இடம்பெறுகின்றது.

மனிதர்களின் மிகைநுகர்வு பாங்குகளும் சுற்றாடல்மீது பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தக் காரணம் நுகர்வுப் பாங்குகள், வாழ்க்கை நடத்தைப்போக்குகள் பற்றி மீண்டும்மீண்டும் சிந்தித்துப் பார்க்கவும் அவற்றைக் கட்டுப்படுத்தி சுற்றாடல்நேயமுள்ள வாழ்க்கை வழிமுறை தொடர்பில் அனைவரதும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென்பதையும் ஞாபகப்படுத்திக்கொண்டேயாகும்.

மிகைநுகர்வின் பெறுபேறுகளாக உணவு, உடைகளை உள்ளிட்ட கழிவுப்பொருட்களைப்போன்றே பாவனையின் பின்னர் அகற்றப்படுகின்ற பிளாஸ்ரிக், பொலித்தீன் என்பது நிகழ்கால உலகில் பிரமாண்டமான சவாலாக மாறி ஒரு நெருக்கடியாகி உள்ளது.

வலுச்சக்தி பாவனையும் பலவிதமான வாயு உமிழ்வு ஊடாக சுற்றாடல்சார் சமநிலையை சிதைக்கின்றது. குறிப்பாக செயற்கை வெப்பமூட்டல் மற்றும் குளிரூட்டல் செயற்பாங்குகள் பச்சை வீட்டு வாயுக்களின் உமிழ்வு மீது தாக்கமேற்படுத்துகின்றது.

பலவிதமான மானிட செயற்பாடுகளின் பெறுபேறாக பச்சை வீட்டு வாயுக்கள் உயர்வடைவதன் காரணமாக தோன்றியுள்ள காலநிலை மாற்றங்களை தடுக்க முடியாதுள்ளது. காலநிலை மாற்றங்கள் பற்றிய நாடுகளுக்கிடையிலான பேரவையின் (IPCC) 6 வது மதிப்பீட்டு அறிக்கையில் காலநிலைசார் அபாயநேர்வுகள் முன்னர் எதிர்பார்த்ததைவிட கடுமையாகவும் வேகமாகவும் இடம்பெறுவதோடு அதற்காக ஒத்திசைவு அடைவது சிரமமானதெக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக குறைந்த வருமானம் பெறுகின்ற நாடுகள், அபிவிருத்தி அடைகின்ற சிறிய தீவுகள் மோசமான சுகாதார தாக்கங்களுக்க இலக்காகி உள்ளனவெனவும் விளிம்புநிலைக் காலநிலை நிலைமைகள் காரணமாக கடந்த தசாப்தத்தில் அபாயநேர்வு வலயங்கள் 15 மடங்குகளால் அதிகரித்துள்ளதெனவும் இந்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டுகின்றது.

வெப்பநிலை அதிகரித்தல் காலநிலை மாற்றங்களின் ஒரு நிகழ்வு மாத்திரமாக அமைவதோடு நீர்வட்டம், கடல், பனிக்கட்டி மற்றும் பனிப்பொழிவு, கடற்புவி இரசாயன நிலைமைகள் என்பவற்றில் இடம்பெறுகின்ற மாற்றங்கள் என்பதும் காலநிலை மாற்றங்களின் பெறுபேறுகளாகும். இந்த மாற்றங்களுக்கிணங்க கடுமையான வறட்சி மற்றும் மிகையான மழைவீழ்ச்சி போன்ற விளிம்புநிலை நிலைமைகள் உருவாகுதல், வெள்ளப்பெருக்கு, புயல்கள், திடீரெனத் தோன்றுகின்ற மிகையான வெப்பம், உயிர்ப்பன்வகைமை தரங்குன்றுதல், கடலின் உவர்த்தன்மை அதிகரித்தல் என்பவற்றை இனங்காண இயலும். மேலும் கடுமையான வறட்சி காரணமாக பனிமலைகள் உருகுவதால் கடல்மட்டம் உயர்வடைவதும் மறுபுறத்தில் தாழ்வான நிலப்பரப்புகள் கடல்நீரில் மூழ்குதலும் இன்றளவில் கடுமையான சிக்கலாக மாறியுள்ளது.

அதற்கிணங்க இன்றளவில் கடல்மட்டம் உயர்வடைகின்றமை காரணமாக நிலப்பரப்பிற்கு ஏற்படுகின்ற அபாயநேர்வு நிலைமையில் உலகம் பூராவிலும் அமிழ்கின்ற நகரங்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு மும்பாய், டாக்கா, சாங்ஹாய், பெங்கொக் ஆகிய நகரங்கள் அவை மத்தியில் அடங்குகின்றன. இலங்கையிலும் இவ்விதமாக கடல் மட்டம் உயர்வடைவதால் கரையோரம்சார்ந்த பிரதேசங்கள் நீரில் மூழ்கும் அபாயநேர்வு ஏற்படக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

உலக சனத்தொகையில் 3.6 பில்லியன் மக்கள் காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுவதாக உலக சுகாதார தாபனம் குறிப்பிடுகிறது. அவர்களின் மதிப்பீட்டின்படி 2030 – 2050 அளவில் காலநிலை மாற்றங்களின் தாக்கம் காரணமாக வருடமொன்றில் மேலதிகமாக ஏறக்குறைய 250,000 இறப்புகள் நிகழுமென்பதாகும். 

தொடர்ந்தும் காலநிலை மாற்றங்கள் பற்றிய அபாயநேர்வினை இனங்காண உலக சுகாதார தாபனத்தின் தரவுகள் பலம்பொருந்திய சான்றுகளை வழங்கியுள்ளன. அதன்படி ஏறக்குறைய 2 பில்லியனுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கமாட்டாதென்பதோடு 600 பில்லியன் பேர் வருடாந்தம் உணவு மூலமாக, நீரினால் மற்றும் ஏனைய விதங்களால் தோன்றுகின்ற நோய்களை எதிர்கொள்ளவேண்டி வரும். 2020 அளவில் ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் ஏறக்குறைய 770 மில்லியன் மக்கள் பட்டினியால் வாடியதோடு காலநிலை மாற்றங்களின் தாக்கம் அதற்கு காரணமாக அமைந்துள்ளமை தெளிவாகின்றது.

மானிட சுகாதாரம் போன்றே சூழற்றொகுதிகளுக்கும் ஏற்படுகின்ற தாக்கத்தை புறந்தள்ளிவிட இயலாது. புவியின் சமநிலைவாய்ந்த இருப்பினை உறுதிசெய்கின்ற தாவர மற்றும் விலங்கினங்கள் அழிவடைந்து வருவதும் கவனத்திற்கொள்ளப்படவேண்டிய விடயமாகும். நிலப்பகுதியிலும் கடலிலும் இந்த இனங்கள் அழிவடைவது ஏறக்குறைய 1000 மடங்குகளால் உயர்வடைந்துள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் தசாப்தத்தில் இந்த அபாயநேர்வு மேலும் உயர்வடையக்கூடுமென்பதோடு காட்டுத் தீ, பீடைகள், நோய்கள் போன்ற அச்சுறுத்தல்கள் இந்த இனங்கள் தொடர்பில் தாக்கமேற்படுத்துமென இனங்காணப்படமுடியும்.

உணவு உற்பத்திச் செயற்பாங்கும் காலநிலை மாற்றங்களின் கட்டாயமான தாக்கத்திற்கு இலக்காகின்றது. அதன்படி நீர்த்தட்டுப்பாடு காரணமாக விளைச்சல் குறைவடைகின்றமையும் மறுபுறத்தில் மிகையான மழை, வெள்ளப்பெருக்கு காரணமாக விளைச்சல் அழிவடைதலும் போன்றே உற்பத்தித்திறன் குறைவடைதல், புல்நிலங்கள் அழிவடைதல், மீன் வளங்கள் குறைவடைதல் முதலியவையும் உலக மக்களின் உணவுத்தேவையை நிவர்த்தி செய்வதற்குள்ள இயலுமையைக் குறைக்கும். அது இறுதியில் சமூக நெருக்கடியைத் தோற்றுவிப்பதையும் தடுக்கமுடியாது. மானிட சுகாதார சிக்கல்கள் காரணமாக தோன்றுகின்ற உடல், உளரீதியான அழுத்தங்களும் வாழ்வாதாரங்களை இழப்பதனால் தோன்றுகின்ற வறுமைநிலை, போசாக்கின்மை, வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சி முதலியவை காரணமாகவும் உலகளாவியரீதியில் ஏற்படுத்துகின்ற அழுத்தமானது உயர்ந்த மட்டத்தில் நிலவுகின்றது. அது வெறுமனே காலநிலை மாற்றங்கள் காரணமாக ஏற்படுகின்றதென்பது பலரது கவனத்திலிருந்து நழுவிச்செல்கின்ற காரணியாக மாறியுள்ளது.

எவ்வாறாயினும் இன்றளவில் இனங்காணப்படுகின்ற இந்த அனைத்துவிதமான அபாயநேர்வு நிலைமைகளும் காலநிலை மாற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான உலக அளவிலான இடையீட்டின் துரித அவசியப்பாட்டினை மேலோங்கச் செய்விக்கின்றன. இல்லாவிட்டால் புவி இன்னும்சில காலத்தின் மனித வாழ்க்கைக்கு எவ்விதத்திலும் பொருத்தமற்ற கிரகமாக மாறிவிடும்.

அதனால் அதற்கான தீர்வுகளைக் கண்டறிகின்ற உலகளாவிய இடையீடுகள், இணக்கப்பாடுகள், உடன்படிக்கைகள் மிகவும் முக்கியமான அணுகுமுறைகளாக இனங்காணப்பட இயலுமென்றபோதிலும் மேற்சொன்ன கட்டுப்பாட்டுக்காக உலகின் அனைத்து நாடுகளுக்கும் உரித்தாகின்ற பொறுப்பு மிகவும் முக்கியமானதாகும்.

உலகளாவிய நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகள், காலநிலை மாற்றங்கள் பற்றிய ஐக்கிய நாடுகளின் கட்டமைக்கப்பட்ட உடன்பாடுகள், பாரிஸ் உடன்படிக்கையை உள்ளிட்டதாக அதற்கான விரிவான இடையீடுகளை செய்துவருகின்றன. அதன்கீழ் உமிழ்வுகளை குறைத்தல், காலநிலை அழுத்தங்களுக்கு ஒத்திசைதல், அவசியமான வழிமுறைகளை மேற்கொள்ள நிதிவசதிகளை வழங்குதலும் மேற்கொள்ளப்படுகின்றது.

குறிப்பாக காற்று விசை, சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி மூலங்களில் பிரவேசித்தல், உயிர்ச்சுவட்டு எரிபொருள் தகனத்தின் மூகலமாக பசுமைக்குடில் வாயு உமிழ்வினைக் கட்டுப்படுத்த பெரிதும் முக்கியமானதாக அமைகின்ற தீர்வாக இதன்போது அறிமுகஞ் செய்யப்படுகின்றது. அதன்கீழ் 2030 அளவில் குறைந்தபட்சம் உயிர்ச்சுவட்டு எரிபொருள் உற்பத்தியும் நுகர்வும் 30 % ஆல் குறைக்கப்படவேண்டியது அவசியமெனவும் காலநிலை மாற்றங்களின் கடுமையான அனர்த்தநிலைமைகளை குறைத்துக்கொள்ள அதன்மூலமாக எதிர்பார்க்கப்படுகின்றதென்பதும் தெளிவாகின்றது. மேலும் இதன்கீழ் 2030 அளவில் உமிழ்வின் ஏறக்குறைய அரைவாசியைக் குறைத்தக்கொள்ளவும் அதனை 1.5 0 C குறைவாக வைத்துக்கொள்ளவும் முன்மொழியப்படுகின்றது. அதன்பொருட்டு நாடுகளின் இணக்கப்பாடும் அதனை அடைவதற்காக செயலாற்றவேண்டியதும் கட்டாயமான அவசியப்பாடாக நிலவுகின்றது.

சர்வதேச உடன்படிக்கைகள், இணக்கப்பாடுகளுடன் அமைந்தொழுகி அரச மட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதைப்போன்றே காலநிலை மாற்றங்களை கட்டுப்படுத்துதல் தொடர்பில் உரித்தாகின்ற தனிப்பட்ட பொறுப்பினையும் எவ்விதத்திலும் புறந்தள்ளிவிட இயலாது. ஏனெனில் தனிமனித நுகர்வுப் பாங்குகள், வாழ்க்கை நடத்தைகள், செயற்பாடுகள் இறுதியில் பில்லியன் கணக்கான மக்களின் கூட்டுச்சேர்க்கையாக மாறுவதாலாகும். அதனால் தனியாள் மட்டத்தில் எடுத்துக்கொள்ளக்கூடிய ஆக்கமுறையான செயற்பாடுகளுக்கு உரித்தாகின்ற பெறுமதியை நாங்கள் மறந்துவிடக்கூடாது.

வீட்டிலிருந்து தொடங்கக்கூடிய இந்த செயற்பாடுகள் இறுதியில் சுற்றாடல்மீது ஏற்படுத்துகின்ற ஆக்கமுறையான தாக்கம் பெரிதும் தீர்மானகரமானதாக காலநிலை மாற்றங்களை குறைத்தலில் தாக்கமேற்படுத்துவதை இனங்காண முடியும். வீட்டில் வலுச்சக்தியை சிக்கனமாக பாவித்தல் என்பது தனியாள் மட்டத்தில் மேற்கொள்ளக்கூடிய பாரிய சுற்றாடல்சார் கிரயத்தை குறைத்தலாக எடுத்துக்காட்டப்பட இயலும். வளிச்சீராக்கம் மற்றும் வெப்பமூட்டல் செயற்பாங்குகளைக் குறைத்து இயற்கை காற்றோட்டம் கிடைத்தக்கவகையில் வீடுகளின் திட்டமிடலை தயாரித்தல், LED குமிழ்களின் பாவனை, வலுச்சக்தி வினைத்திறன்கொண்ட சாதனங்களின் பாவனை, இயலுமான எல்லாநேரங்களிலும் இயற்கைமுறையில் புடவைகளை சலவைசெய்தல் மற்றும் உலர்த்துதல் போன்ற செயற்பாங்குகள் மூலமாக காபன் சுவட்டைக் குறைக்க இயலுமென்பதோடு அது வருடமொன்றுக்கு ஏறக்குறைய 900 Kg ஆல் காபனீரொக்சைட் குறைக்குமென கணிப்பிடப்பட்டுள்ளது.

பொலித்தின், பிளாஸ்ரிக் போன்ற உக்கிப்போகாத கழிவுப்பொருட்களை சுற்றாடலில் கையுதிர்த்தல் பாரிய சிக்கலாக நிலவுகின்ற நிகழ்காலத்தில் அதற்காக நிலவுகின்ற மிகச்சிறந்த தீர்வாக இனங்காணப்படுவது பாவனையைக் குறைத்தல், மீள் பாவனை, பழுதுபார்த்து பாவித்தல் மற்றும் மீள்சுழுற்சி செய்தலாகும். குறிப்பாக பிளாஸ்ரிக் காரணமாக பிறப்பிக்கப்படுகின்ற 1.8 பில்லியன் தொன்களாக அமைகின்ற பச்சை வீட்டு வாயுக்களின் அளவினைக் குறைத்துக்கொள்ள பங்களிப்பு வழங்குகின்றது.

அத்துடன், உணவு விரயம், பச்சை வீட்டு வாயுக்கள் உயர்வடைதல் மற்றும் அதனூடாக காலநிலை மாற்றங்கள் மீது தாக்கமேற்படுத்துகின்ற பிரதான சிக்கலாக நிகழ்காலத்தில் இனங்காணப்பட இயலும். உணவு விரயத்தைக் குறைப்பதன் மூலமாக உணவு உற்பத்தி, பொதியிடல், போக்குவரத்து உள்ளிட்ட செயற்பாங்குகளுக்கான காபன் தடத்தினைக் பாரியளவில் குறைப்பதற்கான இயலுமை கிடைக்கின்றது. அது வருடமொன்றுக்கு ஏறக்குறைய 300Kg அளவிலான காபன்டையொக்சயிட் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது,

போக்குவரத்து என்பது CO 2 ஐ சுற்றாடலில் விடுவிக்கின்ற பிரதான காரணியொன்றாகும். அதன்படி அதன்மூலமாக இடம்பெறுகின்ற கிரயத்தைக் குறைத்துக்கொள்வதற்காக உலக நாடுகள் ஏற்கெனவே துவிச்சக்கர வண்டிகள், பொதுப்போக்குவரத்து சேவைகளை பாவித்தல் ஆக்கமுறையான அணுகுமுறையாக அமைவதோடு அது வருடமொன்றுக்கு 2 தொன் CO 2 வை குறைத்துக்கொள்ள பங்களிப்புச் செய்வதாக அமையும். அதைப்போலவே இலத்திரனியல் மற்றும் கலப்பு வாகனப் பாவனை தொடர்பில் பிரவேசித்தலும் வெற்றிகரமான ஒரு தீர்வாக இனங்காணப்படுகின்றது. அதுவும் கணிசமான மட்டத்தில் காபன் தடத்தினைக் குறைப்பதில் பங்களிப்புச் செய்வதொடு இறுதியில் காலநிலை மாற்றங்களுடன் ஒத்திசைகின்ற வழிமுறைகளென எடுத்துக்காட்டப்படலாம்.

புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி மூலங்கள் மீது உலகளாவிய கவனத்தை செலுத்துதலும் முக்கியமானதாக அமைவதோடு சூரிய சக்தி, காற்று விசை போன்ற வலுச்சக்திகள் ஊடாக வருடத்திற்கு 1.5 தொன் CO 2 ஐ குறைத்துக்கொள்வதற்கான இயலுமை கிடைக்கும்.

மேலும் இனங்காணப்பட்டுள்ள தீர்வாக அமைகின்ற வன வளர்ப்பு தொடர்பிலும் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. அது தனியாள் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மர நடுகை நிகழ்ச்சித்திட்டங்களில் இருந்து நிறுவனம்சார்ந்த மற்றும் அரச மட்டத்திலான அத்துடன் உலகளாவிய மட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற பாரியளவிலான வன வளர்ப்புக் கருத்திட்டங்கள் வரையான விரிவான செயற்பாங்காக எடுத்துக்காட்டப்பட இயலுமென்பதோடு அது CO 2 சதவீதத்தைக் குறைத்துக்கொள்ள காரணமாக அமைகின்ற பிரதானமான காரணியாக அமைகின்றது.

கடல் என்பது புவியின் ஒட்சிசன் தேவைப்பாட்டின் ஏறக்குறைய 70% ஐ நிவர்த்திசெய்கின்ற தனித்துவமான சூழற்றொகுதியாக அமைந்தபோதிலும் மானிட செயற்பாடுகள் காரணமாக கடன்வளங்கள் பாரியளவில் மாசுபாட்டுக்கு இலக்காதலும் மறுபுறத்தில் காலநிலை மாற்றங்களின்  க்கம் காரணமாக கடல் நீரின் அமிலத்தன்மை அதிகரிப்பதன் காரணமாக கடல்வளங்கள் அழிவடைவதும் தோற்றுவிக்கின்ற சவால் கொஞ்சநஞ்சமல்ல. அதனால் இந்த சுற்றாடல் சிக்கல்கள் பற்றி நாடுகள் , நிறுவனங்கள் என்றவகையில் கவனஞ் செலுத்தப்படுவதைப்போன்றே மேற்சொன்ன சுற்றாடல் மாசுபாட்டுக்கு ஏதுவாக அமையக்கூடிய பொறுப்பற்ற செயல்களைக்கூட நிறுத்திவிட தனிப்பட்ட கவனஞ் செலுத்தப்படல் வேண்டும்.

அதற்கிணங்க சுற்றாடல் சம்பந்தமான காலநிலை மாற்றங்கள் உருவாதல், அவற்றுக்கு முகங்கொடுத்தல் மற்றும் சிக்கல்களைக் குறைத்துக்கொள்ளல் தொடர்பில் ஒட்டுமொத்த உலக சமுதாயத்தின் கவனஞ் செலுத்தப்படவேண்டியது அவசியமாகின்றது. அதற்கான விழிப்புணர்வினை ஏற்படுத்துதல் கட்டாயமாக இடம்பெறல் வேண்டும். மானிட விழிப்புணர்வு ஊடாக எதிர்பார்த்துள்ள மனோபாவரீதியான மாற்றம், சுற்றாடல்நேயமுள்ள நடத்தைப்பாங்குகளை நோக்கி நெறிப்படுத்தப்படுமாயின் அது காலநிலை மாற்றங்களை குறைத்துக்கொள்வதற்காகவும் தாக்கமேற்படுத்தக்கூடிய மட்டத்திலான மிகவும் நெகிழ்வான அணுகுமுறையாக அமையுமென எடுத்துக்காட்டப்பட முடியும்.

உலகளாவிய சுற்றாடல் நிகழ்வுகள் வெறுமனே அந்தந்த நாடுகள் தனித்தனியாக அனுபவிக்கின்ற, முகங்கொடுக்கின்றவையாக அமைவதில்லையென்பதும் உலகின் எந்தவொரு இடத்திலும் இடம்பெறுகின்ற காலநிலைரீதியான மாற்றங்கள்சார்ந்த நிகழ்வுகள் உலகிலுள்ள அனைவராலும் கூடக்குறைய முகங்கொடுக்க நேரிடுகின்றவையெனவும் நாங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். குறிப்பாக இலங்கை என்றவகையில் உலகின் ஏனைய நாடுகளைப்பார்க்கிலும் காலநிலை மாற்றங்களின் தாக்கங்கள் குறைவான சாதகமான சுற்றாடல் நிலைமைகளின்கீழ் நிலவுகின்ற நாடென்றவகையில் இனிமேலும் பெருமிதம்கொள்ள முடியாது.

ஏனென்றால் இன்றளவில் காலநிலை மாற்றங்களென இனங்காணப்படாதிருப்பினும் நாங்கள் எதிர்கொள்கின்ற சுற்றாடல் மாற்றங்கள் கணிசமான அளவில் நிலவுவதால் குறிப்பாக மழைவீழ்ச்சிப் பாங்குகள் மாற்றமடைதல், வெப்பமான காலநிலை நிலைமைகள் போன்றவை முன்னர் குறிப்பிட்ட காலநிலை மாற்றங்களின் தோற்றப்பாடுகளே என்பதை கட்டாயமாக இனங்காணவேண்டி நேரிடும்.

இதன்போது கவனஞ்செலுத்தப்படவேண்டிய விடயமாக அமைவது இன்னமும் இலங்கையரான நாங்கள் மேற்சொன்ன சுற்றாடல்சார் மாற்றங்கள் வெறுமனே காலநிலை மாற்றங்களின் கட்டாயமான பெறுபெறுகளே என்பதை இனங்கண்டுள்ளோமா என்பதாகும். ஏனெனில் அத்தகைய புலனுணர்வு ஏற்படாதவரை காலநிலை மாற்றங்கள்மீது தாக்கமேற்படுத்துகின்ற மானிட செயற்பாடுகளின் கட்டுப்பாட்டுக்கான தனது செயற்பொறுப்பினை ஈடேற்றுதல், பங்களிப்பினை வழங்குதல் இடம்பெறுமென எதிர்பார்ப்பதே சிக்கலானதாக அமைவதாலாகும்.

மேற்சொன்ன நிலைமைகள் காலநிலை மாற்றங்கள் மீது தாக்கமேற்படுத்துகின்ற காரணிகளைக் குறைத்துக்கொள்ள, அதற்காக ஒத்திசைய இலங்கையின் கவனம் செலுத்தப்பட மற்றும் அதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தேவைப்பாட்டினை எடுத்தியம்புகின்றது.

தனியாள் பொறுப்புடன் 1981 இன் 47 ஆம் இலக்கமுடைய தேசிய சுற்றாடல் சட்டத்தினால் கையளிக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பிரகாரம் சுற்றாடல் தொடர்பிலான தேசிய ஒழுங்குறுத்தல் நிறுவனமென்றவகையில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் பல்வேறு மட்டங்களில் தனது தாபனஞ்சார் பொறுப்பினை ஈடேற்றுவதற்காக இடையீடு செய்யப்படுகின்றது.

தொழிற்சாலைகளிலிருந்து மேற்கொள்ளப்படுகின்ற உமிழ்வுச் செயற்பாங்கினை கட்டுப்படுத்துதல், நீர் மற்றும் வளித்தர முகாமைத்துவம், பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் வகைகளின் உற்பத்தியை தடைசெய்து கழிவுப்பொருள் முகாமைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதை உள்ளிட்ட விரிவான பொறுப்பினைக்கொண்ட சேவையை மத்திய சுற்றாடல் அதிகாரசபை ஈடேற்றிவருகின்றது. குறிப்பாக சுற்றாடல் கல்வி செயற்பாங்கு ஊடாக தனியாள் மனோபாவங்கள் மற்றும் நடத்தைப் போக்குகளை மாற்றியமைத்து சுற்றாடல்சார் புலனுணர்வுமிக்கவகையில் செயலாற்றுவதற்கான வழிகாட்டப்படுகின்றது. மக்கள் அபிப்பிராயத்தை மாற்றவல்ல பலம்பொருந்திய காரணியான அச்சு, கட்புல - செவிப்புல மற்றும் சமூக வலைத்தளங்களை உள்ளிட்ட வெகுசன ஊடகங்களின் பாவனையும் சுற்றாடல் அறிவினை சமூகமயப்படுத்துதல் மற்றும் அதனூடாக தனியாள் மனோபாவங்கள் மற்றும் நடத்தைசார்ந்த மாற்றங்களும் சுற்றாடல் பேணலுக்கு பங்களிப்புச் செய்கின்றன.

மேலும் காலநிலை மாற்றங்களை கட்டுப்படுத்துவதற்காக தனிப்பட்ட மட்டத்தில் நாங்கள் மேற்கொள்கின்ற ஒவ்வொரு சிறிய செயற்பாடும்கூட ஆக்கமுறையான தாக்கத்தை ஏற்படுத்துவதால், அதனை தாமதித்தலாகாது. ஏனெனில் முன்னர் குறிப்பிட்ட சுற்றாடல் நிகழ்வுகளின் இயற்கையான மாற்றங்களைப் போலன்றி மானிட செயற்பாடுகளின் பெறுபேறுகளென்றவகையில் உருவாகிய காலநிலை மாற்றங்களின் துரிதத்தன்மை மிகவும் வேகமானதாக அமைவதாலாகும். இல்லாவிட்டால் இந்த காலநிலை மாற்றத்தின் மத்தியில் நிலைபெறுதகு அபிவிருத்தி என்பது யதார்த்தமானதாக அமைய மாட்டாது.

சுஜீவா பெரேரா

சிரேஷ்ட சுற்றாடல் உத்தியோகத்தர்

சுற்றாடல் மேம்பாட்டுப் பிரிவு

மத்திய சுற்றாடல் அதிகாரசபை

நன்றி வீரகேசரி

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்