வெற்றிமாறனின் அடுத்த படம் யாரோடு
20 மார்கழி 2024 வெள்ளி 11:11 | பார்வைகள் : 235
தமிழ் சினிமாவில் நம்பர் 1 இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் தற்போது விடுதலை 2 படம் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு திரைக்கு வந்து மாபெரும் வெற்றியை ருசித்தது. விடுதலை முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை ஒன்றரை வருட கடின உழைப்புக்கு பின் எடுத்து முடித்த வெற்றிமாறன். அப்படத்தை இன்று திரைக்கு கொண்டுவந்துள்ளார். விடுதலை 2 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கெளதம் மேனன், கென் கருணாஸ், அனுராக் கஷ்யப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து உள்ளார். விடுதலை 3ம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், விடுதலை 2 படத்தின் முடிவில் அதுகுறித்து எந்தவித ஹிண்ட்டும் கொடுக்கப்படாததால் 3ம் பாகம் வர வாய்ப்பில்லை என்பது உறுதியாகி உள்ளது.
இதனால் விடுதலை 2 படத்துக்கு பின் வெற்றிமாறன் எந்த படத்தை இயக்க உள்ளார் என்கிற கேள்வி பலர் மனதிலும் உள்ளது. அதற்கு விடைதரும் விதமாக ஒரு அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதன்படி இயக்குனர் வெற்றிமாறன் அடுத்ததாக சூர்யாவின் வாடிவாசல் படத்தை தான் இயக்கும் முடிவில் இருக்கிறாராம். அப்படத்தின் பணிகள் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த நிலையில், விரைவில் அதை தூசிதட்டி எடுக்க உள்ளாராம் வெற்றிமாறன்.
வாடிவாசல் திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இப்படம் சு செல்லப்பா இயக்கிய வாடிவாசல் என்கிற நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது. இப்படத்தில் ஜல்லிக்கட்டு சம்பந்தமான காட்சிகள் இடம்பெற உள்ளதால் அதற்கான கிராபிக்ஸ் பணிகள் தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. இதனால் விரைவில் வாடிவாசல் குறித்த அப்டேட் வெளிவர வாய்ப்புள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.