Val-de-Marne : பெண் ஒருவர் வீதியில் இருந்து நிர்வாணமாக மீட்பு!!

20 மார்கழி 2024 வெள்ளி 17:33 | பார்வைகள் : 4918
நாற்பது வயதுகளையுடைய பெண் ஒருவர் நிர்வாணமாக வீதியில் கட்டப்பட்டு கிடந்த நிலையில், மருத்துவக்குழுவினரால் மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று டிசம்பர் 19 ஆம் திகதி இச்சம்பவம் Perreux-sur-Marne (Val-de-Marne) நகரில் உள்ள Avenue du Président Roosevelt வீதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காவல்துறையினர் விசாரணைகள் மேற்கொண்டதில், வீடற்ற ஒருவரை வீட்டில் தங்கவைத்ததாகவும், பின்னர் குறித்த நபர் அத்துமீறிச் செயற்பட்டதாகவும், அவரை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவச் சான்றுகள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 28 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் Neuilly-sur-Marne நகரில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளார்.