Paristamil Navigation Paristamil advert login

இல் து பிரான்சுக்குள் பலத்த போக்குவரத்து நெரிசல்.. 450 கி.மீ அதிகமாக பதிவு!!

இல் து பிரான்சுக்குள் பலத்த போக்குவரத்து நெரிசல்.. 450 கி.மீ அதிகமாக பதிவு!!

20 மார்கழி 2024 வெள்ளி 18:15 | பார்வைகள் : 13660


இன்று வெள்ளிக்கிழமை மாலை இல் து பிரான்சின் வீதிகளில் வழமைக்கு அதிகமான போக்குவரத்து நெரிசல் பதிவானது. 

 

கிறிஸ்மஸ் விடுமுறைக்காக பலர் இல் து பிரான்சை விட்டு புறப்பட்டுள்ளனர். இதனால் வெளிச்செல்லும் வீதிகளில் பலத்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வீதி போக்குவரத்து கண்காணிப்பாளர்களான Sytadin அறிவித்துள்ளது. மாலை 6 மணி அளவில் 450 கி.மீ தூரத்துக்கு நெரிசல் ஏற்பட்டது. இந்த பருவகாலத்தில் வழக்கமாக 300 கி.மீ போக்குவரத்து நெரிசல் பதிவாகிறதாக தெரிவிக்கப்படுகிறது.

 

நெடுஞ்சாலைகள் பயணம் மேற்கொண்டுள்ளவர்கள் பெருமளவில் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்