ஒரே நாடு ஒரே தேர்தல்: ஜே.பி.சி., தலைவர் நியமனம்
21 மார்கழி 2024 சனி 02:53 | பார்வைகள் : 848
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்ட பார்லிமென்ட் கூட்டுக்குழு( ஜே.பி.சி.,) தலைவராக பா.ஜ., எம்.பி.,யும் முன்னாள் மத்திய அமைச்சருமான பி.பி. சவுத்ரி நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஒரே நேரத்தில் லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்த வகை செய்யும் மசோதா, லோக்சபாவில் டிச., 17 ல் தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை பார்லிமென்ட் கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்ப லோக்சபா எம்.பி.,க்கள் அதிகம் பேர் ஆதரவு தெரிவித்தனர். இது தொடர்பான இரு மசோதாவை ஆய்வு செய்வதற்கான ஜே.பி.சி., என்றழைக்கப்படும் பார்லிமென்ட் கூட்டுக்குழுவில் இடம்பெறும் லோக்சபாவை சேர்ந்த எம்.பி.,க்கள் பெயர்கள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
பா.ஜ., சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர்கள் பிபி சவுத்ரி, அனுராக் தாக்கூர், எம்.பி.,க்கள் பர்ஷோத்தம்பாய் ரூபாலா, பன்சுரி சுவராஜ், சம்பித் பத்ரா, சி.எம்.ரமேஷ், விஷ்ணு தயால் ராம், பரத்ருஹரி மஹ்தாப், அனில் பலூனி, விஷணு தத் சர்மா, பைஜெயந்த் பன்டா,சஞ்சய் ஜெயிஸ்வால்
காங்கிரசின் பிரியங்கா, மணீஷ் திவாரி, சுக்தியோ பகத்
சிவசேனாவின் ஸ்ரீகாந்த் ஷிண்டே
சமாஜ்வாதியின் தர்மேந்திர யாதவ் ,சோட்டேலால்
திரிணமுல் காங்கிரசின் கல்யாண் பானர்ஜி
தி.மு.க.,வின் செல்வகணபதி
தெலுங்குதேசத்தின் ஹரீஸ் பாலயோகி
தேசியவாத காங்கிரசின் சரத்பவார் அணியின் சுப்ரியா சுலே
லோக்ஜனசக்தி கட்சியின் சம்பவி
உத்தவ் தாக்கரே (உத்தவ் தாக்கரே தரப்பு) அனில் யஷ்வந்த் தேசாய்
மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் ராதாகிருஷ்ணன்
ராஷ்ட்ரீய லோக்தள கட்சியின் சந்தன் சிங் சவுகான்
ஜனசேனா கட்சியின் வல்லபனேனி பாலாஷவுரி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
ராஜ்யசபா எம்.பி.,க்களான பா.ஜ.,வைச் சேர்ந்த கன்ஷியாம் திவாரி, புவனேஸ்வர் கலிதா, கே. லக்ஷ்மன்,
கவிதா படிடர்,
ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் ஜா
காங்கிரசின் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ,முகுல் பால்கிருஷ்ணா வாஸ்னிக்,
திரிணமுல் காங்கிரசின் சாகேத் கோகலே ,
தி.மு.க.,வின் பி.வில்சன்,
ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங்,
பிஜூ ஜனதா தளத்தின் மானஸ் ரஞ்சன் மங்கராஜ்,
ஓய்.எஸ்.ஆர். காங்., கட்சியின் வி.விஜயசாய் ரெட்டி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
தலைவர்
இக்குழுவின் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ஜ., எம்.பி.,யுமான பி.பி.சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 2017- 19 காலகட்டத்தில் கார்பரேட் விவகாரம், சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் பதவி வகித்து வந்தார்.
இவர் வெளியுறவு குழுவுக்கான தலைவராகவும், தனிநபர் பாதுகாப்பு மசோதாவிற்கான கூட்டு குழு தலைவராகவும் பதவி வகித்து உள்ளார்.