மாய மந்திரங்கள் கொண்ட அருங்காட்சியகம்! - அவசியம் பார்க்கவேண்டிய இடம்!!
13 புரட்டாசி 2018 வியாழன் 12:30 | பார்வைகள் : 18031
உங்களுக்கு 'மேஜிக்' மேல் அலாதி விருப்பம் உள்ளதா...? உங்களுக்குத்தான் இந்த 'பிரெஞ்சு புதினம்!'
பரிசில், ஒரு அருங்காட்சியகம் உள்ளது. அங்கு 'மேஜிக்' செய்ய பயன்படுத்தும் பல நூதனமான பொருட்களை சேமித்து வைத்துள்ளனர். குறிப்பாக ஆரம்ப காலத்தில் எவ்வாறு 'மேஜிக்' செய்து காட்டினார்கள்... அதற்கு எதுமாதிரியான உபகரணங்களை பயன்படுத்தினார்கள் என அத்தனையும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
நீங்கள் உள்ளே நுழைந்தால் உள்ளே பார்வையிடுவதற்கு பல பொருட்கள் உண்டு... புகைப்படத்தில் மாட்டப்பட்டிருக்கும் 'பிரேம்'மை புகைப்படத்தில் உள்ள ஒருவம் ஒன்று இழுத்துக்கொள்வது, சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் தலை ஒன்றில் இருந்து நாக்கு மட்டும் வெளியே தள்ளுவது, வட்டமான ஒரு பலகையில் ஒருவரின் தலை வரையப்பட்டிருக்கும், அதை தலைகீழாய் திருப்பினால் பிறிதொரு உருவம் தென்படும், ஒரு புகைப்படத்துக்குள் உள்ள பட்டாசு திடும்மென ஒளிருவது, தானாக கிட்டார் வாசிக்கும் ஒரு பொம்மை என பல சுவாரஷ்யங்கள் இங்கு கொட்டிக்கிடக்கின்றன.
தவிர, சவப்பெட்டிக்குள் ஒருவரை படுக்க வைத்து முறுக்கே மறுக்கே கத்தியை சொருகுவது, பெட்டியை நான்கு துண்டுகளாக பிரித்துவிட்டு, பின்னர் மீண்டும் ஒன்று சேர்த்து அவரை உயிர்ப்பிப்பது என சகல மேஜிக்குகளும் இங்கு காட்சிக்கு உண்டு.
ஓநாய் தலை கொண்ட மரத்தினால் செய்யப்பட்ட மனிதர் ஒருவர் 'ஜிம்'மில் செய்வது போல் உடற்பயிற்சி எல்லாம் செய்வார். அதையும் நீங்கள் தவறாமல் பார்க்கவேண்டும்.
பரிஸ் நான்காம் வட்டாரத்தில் உள்ள Musée de la Magie இல் தான் இவை அனைத்தும்.
முகவரி : 11 Rue Saint-Paul, 75004 Paris. தினமும் மாலை 14.00 மணிக்கு திறக்கும். கட்டணங்கள் உண்டு.