குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் கொடுக்கவில்லை; கனடாவுக்கு இந்தியா பதிலடி!
21 மார்கழி 2024 சனி 02:57 | பார்வைகள் : 165
குற்றச்சாட்டுகளுக்கு கனடா எந்த ஆதாரமும் கொடுக்கவில்லை. பொய் குற்றச்சாட்டுகளால் இருதரப்பு உறவுகளுக்கு தீங்கு விளைவிக்கும் என மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் தெரிவித்தார்.
கனடா மண்ணில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில், இந்திய தூதர்களுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டி இருந்தது. லோக்சபாவில் காங்கிரஸ் எம்.பி., மணீஷ் திவாரியின் கேள்விக்கு, மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: இந்தியா மீது சுமத்தியுள்ள கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு கனடா எந்த ஆதாரமும் கொடுக்கவில்லை. கனடாவில் உள்ள இந்திய குடிமக்களுக்கு எதிரான வழக்குகள், இருதரப்பு உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
தொடர்ந்து பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தினால், இரு தரப்பு உறவுகளுக்கு தீங்கு விளைவிக்கும். இந்திய மண்ணில் இருந்து, தேச விரோத சக்திகளாக செயல்படும் கனடா அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அரசு வலியுறுத்தி உள்ளது. வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பதில் அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்படும். அமெரிக்கா மற்றும் கனடாவில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கிறோம். இவ்வாறு கீர்த்தி வரதன் சிங் கூறியுள்ளார்.