இலங்கையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கை

21 மார்கழி 2024 சனி 03:38 | பார்வைகள் : 3714
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, மேல் மாகாணத்தில் 1,500 ற்கும் அதிகமான பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் நத்தார் பண்டிகை மற்றும் புத்தாண்டை முன்னிட்டு வழிபாட்டு ஸ்தலங்கள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மக்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படும்.
அதேநேரம் சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்காக 500 ற்கும் மேற்பட்ட பொலிஸார் சிவில் உடையில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், நாடளாவிய ரீதியாக உள்ள வழிபாட்டு ஸ்தலங்களிலும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொழும்பு நகரில் மாத்திரம் 600 பொலிஸார் போக்குவரத்து கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025