Paristamil Navigation Paristamil advert login

கோல்மழை பொழிந்த ஜேர்மனி கிளப்! தவிடுபொடியான குட்டி அணி

கோல்மழை பொழிந்த ஜேர்மனி கிளப்! தவிடுபொடியான குட்டி அணி

21 மார்கழி 2024 சனி 10:52 | பார்வைகள் : 2657


பண்டஸ்லிகா தொடரில் பாயர்ன் முனிச் 5-1 என்ற கோல் கணக்கில் ஆர்.பி.லெய்ப்ஸிக் அணியை பந்தாடியது. 

பாயர்ன் முனிச் (Bayern munich) மற்றும் ஆர்.பி.லெய்ப்ஸிக் (RB Leipzig) அணிகளுக்கு இடையிலான பண்டஸ்லிகா (Bundesliga) கால்பந்து போட்டி Allianz Arenaவில் நடந்தது.

ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே பாயர்ன் வீரர் ஜமால் முசியாலா (Jamal Musiala) அபாரமாக கோல் அடித்தார். அடுத்த நிமிடமே லெய்ப்ஸிக் வீரர் பதிலடி கோல் அடிக்க ஆட்டம் சூடுபிடித்தது. 

எனினும் பாயர்ன் முனிச் அணியின் கையே ஓங்கி இருந்தது. 25வது நிமிடத்தில் Konrad Laimer கோல் அடித்தார்.  

அதனைத் தொடர்ந்து நட்சத்திர வீரர் ஜோஷுவா கிம்மிக் (Joshua Kimmich) 36வது நிமிடத்தில் கோல் அடிக்க, முதல் பாதியில் பாயர்ன் அணி 3-1 என முன்னிலை வகித்தது.

இரண்டாம் பாதியின் 75வது நிமிடத்தில் Leroy Sane ஒரு கோலும், Alphonso Davies 78வது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தார்.

லெய்ப்ஸிக் அணியால் மேற்கொண்டு கோல் அடிக்க முடியாததால், பாயர்ன் முனிச் 5-1 என்ற கோல் கணக்கில் இமாலய வெற்றி பெற்றது.    

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்