Paristamil Navigation Paristamil advert login

பல்வேறு சம்பவங்களைச் சந்தித்த Ritz உணவகம்! - ஒரு சுவாரஷ்ய தொகுப்பு!!

பல்வேறு சம்பவங்களைச் சந்தித்த Ritz உணவகம்! - ஒரு சுவாரஷ்ய தொகுப்பு!!

10 புரட்டாசி 2018 திங்கள் 11:30 | பார்வைகள் : 18341


உலகின் மிக ஆடம்பரமான உணவகம் (தங்குமிடம்/ஹோட்டல்) பட்டியலில் எப்போதும் உச்சத்தில் இருக்கும் Ritz உணவகம் பரிசின் முதலாம் வட்டாரத்தில் உள்ளது. 
 
இந்த உணவகம் பற்றி பல்வேறு சுவாரஷ்ய சம்பவங்கள் உள்ளன. 
 
இவ்வருடம் (2018) ஜனவரி மாதம் 10 ஆம் திகதி இங்கு ஒரு திருட்டு சம்பவம் இடம்பெற்று பெரும் பரபரப்பாகியிருந்தது. ஐந்து நபர்கள் சேர்ந்து ஒரு மில்லியன் யூரோக்கள் பெறுமதியான நகைகளை திருடிச் சென்றனர். அவர்களில் மூவர் தப்பிச் செல்லும் முன்னர் கைது செய்யப்பட்டிருந்தனர். 
 
Ernest Hemingway என்பவர் அமெரிக்காவின் பிரபல எழுத்தாளர். இரண்டாம் உலகப்போர் நிறைவடைந்த அடுத்த சில வருடங்கள் மனைவியை அமெரிக்காவில் விட்டுவிட்டு, Ritz உணவகத்தில் வந்து தங்கி இருந்தார். சில வருடங்கள் கழித்து அவரின் மனைவி 'நான் உங்களை விவாகரத்து பெற விரும்புகிறேன்!' என ஒரு கடிதம் ஒன்றை இவருக்கு அனுப்பியிருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் என்ன செய்வது என தெரியாமல், மனைவியின் புகைப்படத்தை கழிவறையில் கிழித்து போட்டார். இருந்தாலும் அவருக்கு ஆத்திரம் அடங்கவில்லை. பின்னர் தன்னுடைய பிஸ்ட்டல் துப்பாக்கியை எடுத்து கழிவறையை நோக்கி 'டுமீல் டுமீல்' என இரண்டு முறை சுட்டார். காவல்துறை வந்து கைது செய்தது. 
 
 
 இளவரசி டயானா, தனது கணவரை பிரித்தானியாவில் விட்டுவிட்டு, தனது காதலன் Dodi Fayed உடன் உலகம் முழுவதும் சுற்றிவிட்டு, இறுதியாக பரிசுக்கு வந்தார். Pont de l'Alma சுரங்கத்துக்குள் மகிழுந்து செல்லும் போது விபத்து ஏற்படு உயிரிழந்தார். டயானா, Dodi Fayed இருவரும் இறந்ததோடு வாகன சாரதி Henri Paul உம் உயிரிழந்திருந்தார். அவர் Ritz உணவகத்தின் ஆஸ்தான சாரதி. டயானா Ritz உணவகத்தில் தங்குவதற்காகத் தான் விமான நிலையத்தில் இருந்து மகிழுந்தில் வந்திருகொண்டிருந்தார். அப்போதே விபத்து ஏற்பட்டது. 
 
 
சுவாரஷ்யம் தான் இல்லையா??!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்