'ஜெயிலர் 2' படப்பிடிப்பு எப்போது ?
21 மார்கழி 2024 சனி 12:14 | பார்வைகள் : 146
+++சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருந்த நிலையில், தற்போது இயக்குனர் நெல்சன் இந்த படத்தின் முக்கிய பணியை தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவான 'ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் சுமார் ரூ.600 கோடி வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது இயக்குனர் நெல்சன், லொகேஷன் தேடும் பணியை தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. கோவை மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும், அதற்கான லொகேஷன் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், வரும் ஜனவரிக்குள் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பை ரஜினிகாந்த் முடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், மார்ச் மாதம் முதல் ’ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், ’ஜெயிலர் 2’ படத்தின் ப்ரோமோ படப்பிடிப்பு சமீபத்தில் நடந்ததாக செய்திகள் வெளியான நிலையில், ஜனவரி 1, புத்தாண்டு தினத்தில் ப்ரோமோ வீடியோ வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ’