Paristamil Navigation Paristamil advert login

நெத்திலி மீன் குழம்பு”

 நெத்திலி மீன் குழம்பு”

21 மார்கழி 2024 சனி 12:16 | பார்வைகள் : 120


கிராமத்தில் திரும்பி பக்கம் எல்லாம் ஓடை மற்றும் ஆறுகள் அதிகமாக இருக்கும். இந்த பகுதிகளில் இருந்து பிடிக்கும் நெத்திலி மீன் ஒரு அருமையான சுவை கொடுக்க கூடிய மீனாகும். இதில் நிறைய சத்துக்களும் நிறைந்துள்ளன. நெத்திலி மீன் குழம்பு எல்லாருக்கும் பிடிக்கும். இந்த சுவையான மீன் எப்படி சமைக்கலாம்முனு பாக்கலாமா..?

தேவையான பொருட்கள்: 
ஒரு கிலோ நெத்திலி மீன்,
தேங்காய் 
மசாலா விழுது தயாரிக்க,
அரை மூடி தேங்காய் 
,அரை டீஸ்பூன் சீரகம்,
தேவையான அளவு தண்ணீர்,
3 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்,
ஒரு டீஸ்பூன் கடுகு,
அரை டீஸ்பூன் வெந்தயம்,
12 முதல் 15 சிறிய வெங்காயம்
,2 பச்சை மிளகாய்,1 
டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
,1 தக்காளி ,
அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
,3 டீஸ்பூன் மிளகாய் தூள்,
1 டீஸ்பூன் மல்லித்தூள்,
ஒரு எலுமிச்சை அளவுள்ள புளி
,சிறிதளவு கறிவேப்பிலை
தேவையான அளவு உப்பு

சுவையான நெத்திலி மீன் குழம்பிற்கான செய்முறை : முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் நெத்திலி மீனை போட்டு சுத்தமாக கழுவி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் இதற்கு தேவையான மசாலாவை அரைக்க வேண்டும். அதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் அல்லது அம்மியிலியோ துருவிய தேங்காய், சீரகம், தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் ஒரு மண்சட்டி அல்லது ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, வெந்தயம், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். இவை அனைத்தின நிறமும் மாறிய 

பின்னர் இதில் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட்டை போட வேண்டும். மேலும் இஞ்சி பூண்டு பேஸ்ட் இன் பச்சை பச்சை வாசனை போனதும் அதில் பொடியாக நறுக்கிய தக்காளி மஞ்சள் தூள் மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

இந்த கலவையில் தற்போது கரைத்து வைத்திருக்கும் புளி கரைசலை சேர்க்கவும். மேலும் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலா விழுதை சேர்த்து கலக்கி விடவும். பின்னர் கறிவேப்பிலை சேர்த்து மூடி போட்டு வைத்து பத்து நிமிடங்கள் வரை அதனை கொதிக்க விடவும்.

குழம்பு கொதிநிலையை அடைந்தவுடன் நாம் சுத்தம் செய்து வைத்திருந்து நெத்திலி மீனை சேர்க்க வேண்டும். நெத்திலி மீனை கரண்டியால் கிளறாமல் மண் சட்டியை மெதுவாக தூக்கி அசைத்துக் கலக்க வேண்டும். இதை குறைந்தது ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் மூடிய நிலையில் வேக விட வேண்டும். ஐந்து நிமிடங்களுக்கு பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு இறக்கினால் சுவையான நெத்திலி மீன் குழம்பு தயார்.

இந்த நெத்திலி மீன் குழம்பை மூன்று நாட்களுக்கு மேல் வைத்து சாப்பிடலாம். முதல் நாளை விட அடுத்த இரண்டு நாட்கள் இந்த குழம்பின் சுவை அதிகரிக்கும். அதேபோல் மீன் குழம்பை இட்லி, தோசை, சாதம் எல்லாவற்றைக்கும் சேர்த்து சாப்பிடலாம்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்