Paristamil Navigation Paristamil advert login

வாட்ஸ்அப்பில் வரும் ChatGPT - இலவசமாக அணுகுவது எப்படி?

வாட்ஸ்அப்பில் வரும் ChatGPT - இலவசமாக அணுகுவது எப்படி?

21 மார்கழி 2024 சனி 14:46 | பார்வைகள் : 1386


உலகளவில் உள்ள அனைத்து WhatsApp பயனர்களும் இலகுவான முறையில் ChatGPT-ஐ பயன்படுத்துவதற்கான புதிய அம்சத்தை OpenAI அறிமுகப்படுத்தியுள்ளது.

நாளுக்கு நாள் artificial intelligence தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. இது பலரது வேலையையும் எளிதாக்கியுள்ளது எனலாம். 

அந்தவகையில் தற்போது அதை மீண்டும் எளிதாக்கி, வாட்ஸ்அப் மூலம் கொண்டு வந்துள்ளது.

அதாவது வாட்ஸ்அப் பயனாளர்கள் தங்களது நண்பர்களுடன் Chat செய்வது போல், ChatGPT இலும் தற்போது வாட்ஸ்அப்பில் செய்யலாம்.  

உலகளவில் 2.7 பில்லியன் பயனாளர்கள் பிரத்யேக எண் மூலம் ChatGPT உடன் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்க பயனர்கள் Voice Call மூலமாகவும் தொடர்புக்கொள்ளும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.  

ChatGPT இன் வாட்ஸ்அப் ஒருங்கிணைப்பு சோதனைக்குரியது என்பதால், அனைத்து பயனர்களும் முதன்மை ChatGPT கணக்குகளைப் பயன்படுத்துமாறு OpenAI வலியுறுத்தியுள்ளது. 


 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்