Paristamil Navigation Paristamil advert login

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா விடுதலை 2?

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா விடுதலை 2?

21 மார்கழி 2024 சனி 14:48 | பார்வைகள் : 494


கடந்த ஆண்டு வெளியான விடுதலை பாகம் 1 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து விடுதலை 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது. அதன்படி வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி ஆகியோரின் கூட்டணியில் இன்று (டிசம்பர் 20) விடுதலை பாகம் 2 திரைப்படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? என்பதை விமர்சனமாக பார்க்கலாம்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா விடுதலை 2? .... திரை விமர்சனம்!விடுதலை பாகம் 1 படத்தில் அதிகாரிகளின் அதிகார வர்க்கம் தாழ்த்தப்பட்ட மக்களை எப்படி நடத்துகிறது என்பது பற்றியும் போலீஸுக்கும் வாத்தியாருக்கும் (விஜய் சேதுபதி) இடையில் நடக்கும் மோதல் பற்றிய கதையாக இருந்தது. இந்நிலையில் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி எப்படி வாத்தியாராக உருவாகி கம்யூனிசம் பாதையை எப்படி தேர்ந்தெடுக்கிறார்? எதற்காக தேர்ந்தெடுக்கிறார்? என்பது பற்றி சொல்லப்பட்டுள்ளது. மேலும் போலீஸுக்கும் மக்கள் படைக்கும் இடையில் நடந்த மோதலில் யார் ஜெயித்தது என்பதுதான் படத்தின் மீதி கதை

முதல் பாகம் முழுவதும் சூரியை சுற்றி நகர்ந்த நிலையில் இரண்டாம் பாகம் முழுவதும் வாத்தியாராக நடித்திருந்த விஜய் சேதுபதியை சுற்றி நகர்ந்துள்ளது. அதன்படி மஞ்சு வாரியருடனான அவருடைய காதல், கல்யாணம், குழந்தைகள் என காட்டப்படும் அதே வேளையில் கம்யூனிசம் என்ற பாதையில் பயணிக்கும் அவர் ஒவ்வொரு விஷயங்களையும் அவர் பாடமாக கற்றுக் கொடுக்கிறார். மேலும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அதிகார வர்க்கத்தினர் நடத்திய வன்முறையின் காரணமாக அதை வன்முறையை கையில் எடுத்ததால் நடந்த விபரீதங்கள், சாதியை ஏற்றத்தாழ்வு, கொலைகள் என திரைக்கதையை நகர்த்தியுள்ளார் வெற்றிமாறன்.

இதில் விஜய் சேதுபதியின் நடிப்பு கைத்தட்டல் பெறுகிறது. அதேபோல் விஜய் சேதுபதிக்கும் மஞ்சு வாரியருக்கும் இடையிலான காதல் அனைவரையும் ரசிக்க வைக்கிறது. இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம் தந்துள்ளதுஇருப்பினும் அரசியல் தொடர்பான வசனங்கள் சற்று சலிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் இரண்டாம் பாகத்தில் நடிகர் சூரியின் கதாபாத்திரம் வலுவாக அமைக்கப்படவில்லை.

ஆனாலும் இந்த படத்தின் மூலம் சொல்ல வந்த கருத்துக்களை அழுத்தமாக சொல்லி இருக்கிறார் வெற்றிமாறன். இருப்பினும் இடைவேளைக்குப் பிறகு இருக்கும் சில குழப்பங்களை தவிர்த்து இருந்தால் படம் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.

எழுத்துரு விளம்பரங்கள்