Paristamil Navigation Paristamil advert login

திடீரென பிரபலமான பாழடைந்த Pont du Gard மேம்பாலம்! - சில தகவல்கள்!!

திடீரென பிரபலமான பாழடைந்த Pont du Gard மேம்பாலம்! - சில தகவல்கள்!!

6 புரட்டாசி 2018 வியாழன் 10:30 | பார்வைகள் : 18227


தெற்கு பிரான்சில் கேட்பாரற்றுக்கிடந்த மேம்பாலம் ஒன்று திடுமென மிக பிரபலமாகிவிட்டது. சுற்றுலாப்பயணிகள் வரவால் 'வாகன தரிப்பிடத்துக்கே திண்டாடவேண்டியதாய் உள்ளது' என பயணிகள் கவலைப்படுகின்றனர். 
 
தெற்கு பிரான்சின் Gard மாவட்டத்தின் Vers-Pont-du-Gard நகரில் உள்ளது. தெற்கு பிரான்ஸ் எங்கும் வியாபித்திருக்கும் Gardon ஆற்றினை கடக்கும் ஒரு மேம்பாலம் இது. 
 
கி.பி 40 இல் இருந்து 60 வரையான காலப்பகுதியில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டிருக்கலாம் ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். மிக துல்லியமான தகவல்கள் இல்லை.  
 
 
சோகம் என்னவென்றால், இந்த மேம்பாலத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டே பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டோம். அட, 6 ஆம் நூற்றாண்டில் இருந்து இது கேட்பாரற்றுத்தான் கிடக்கின்றது. 
 
ரொமேனிய கலாச்சாரத்தை அடிப்படையாக வைத்து இந்த பாலம் கட்டுமானப்பணி இடம்பெற்றிருந்தது. பாலம் நல்ல 'ஸ்ட்ரோங்' ஆக இருந்தாலும், அதன் வெளிப்புறம் எல்லாம் சேதமாகிவிட்டுள்ளது. 
 
1985 ஆம் ஆண்டு, யுனெஸ்கோவின் "உலக பாரம்பரிய தளங்கள்" பட்டியலில் இது இடம்பிடித்துள்ளது.  
 
தரையில் (ஆற்றில்) இருந்து 48.8 மீட்டர்கள் உயரமும், 6.4 மீட்டர்கள் அகலமும், 360 மீட்டர்கள் நீளமும் கொண்டது இந்த மேம்பாலம். 
 
இன்று இந்த மேம்பாலம் பல சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கிறது. அட தரிப்பிடத்துக்கே €18 யூரோக்கள் வரை பெற்றுக்கொள்கிறார்கள் என தகவல் கிடைத்துள்ளது. ஆனாலும் இந்த உயரத்தில் இருந்து ஆற்றையும், அதை சுற்றியுள்ள பிராந்தியங்களையும் பார்வையிடுவதே 'மகிழ்ச்சி' தான்!! 
 
**
குறிப்பு : இந்த ஓவியம் Hubert Robert என்பவரால் 16 ஆம் லூயி மன்னனுக்காக 1787 ஆம் ஆண்டு வரையப்பட்டது.  படத்தில் இருப்பது Pont du Gard மேம்பாலம் தான்!!
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்