Paristamil Navigation Paristamil advert login

ராபின் உத்தப்பாவுக்கு பிடியாணை- வருங்கால வைப்பு நிதி மோசடி குற்றச்சாட்டு

ராபின் உத்தப்பாவுக்கு பிடியாணை- வருங்கால வைப்பு நிதி மோசடி குற்றச்சாட்டு

22 மார்கழி 2024 ஞாயிறு 07:13 | பார்வைகள் : 3076


வருங்கால வைப்பு நிதி மோசடி குற்றச்சாட்டு காரணமாக கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு பிடியாணை வழங்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக வருங்கால வைப்பு நிதி மோசடி குற்றச்சாட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தப்பா பெங்களூரைச் சேர்ந்த சென்டாரஸ் லைஃப்ஸ்டைல் பிராண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.

இந்த நிறுவனம் தனது ஊழியர்களிடம் வசூலித்த சுமார் ரூ.24 லட்சம் ரூபாயை தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியில் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


மேலும், ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்த தொகையை உத்தப்பாவின் நிறுவனம் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் செலுத்தாமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதையடுத்து, உத்தப்பாவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது துபாயில் உள்ள உத்தப்பா, 27ஆம் திகதிக்குள் பணத்தை செலுத்த வேண்டும் எனவும், அவ்வாறு செலுத்தத் தவறினால் கைது செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    3

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்