90 வயதிலும் பளுதூக்கும் போட்டியில் அசத்தும் தைவான் பாட்டி
22 மார்கழி 2024 ஞாயிறு 07:57 | பார்வைகள் : 119
தைவான் பாட்டி செங் சென் சின்-மெய் (90) டைப்பேவில் நடந்த பளுதூக்கும் போட்டியில் 35 கிலோ பாரத்தை தூக்கி அசத்தியுள்ளார்.
2023-ஆம் ஆண்டிலிருந்து பளுதூக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
பார்கின்சன் நோயால் பாதிக்கபட்ட அவர், தனது உடல் நிலையைச் சீரமைக்க அவரது பேத்தியின் ஊக்கத்தால் இதைத் தொடங்கியுள்ளார்.
இந்தப் பயிற்சிகள் அவரது உடல்நிலையை மேம்படுத்தி, இடுப்பு நிமிர்ச்சியைக் கூட்டியுள்ளன.
44 பேருடன் நடைபெற்ற 70 வயதுக்கும் மேலானவர்களுக்கான போட்டியில், 92 வயதுடைய மூத்த பங்கேற்பாளர் உட்பட பலரும் தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.
இதில், செங் சென், ஆறு கவர்களைக் கொண்ட ஹெக்ஸ் பாரைப் பயன்படுத்தி 45 கிலோ வரை தூக்கினார்.
"வயதானவர்கள் அனைவரும் இதுபோன்ற பயிற்சியில் சேருங்கள். மிகுந்த பாடுபட வேண்டியதில்லை, ஆனால் ஆரோக்கியமாக இருக்க இது அவசியம்," என செங் சென் பாட்டி அறிவுரை கூறியுள்ளார்.
தைவானில், முதியோருக்கான சிறப்பான உடற்பயிற்சி மையங்களை அரசு அமைத்துள்ளது. இது நாட்டு மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முயல்கிறது.