Paristamil Navigation Paristamil advert login

அணு உலையில் இருந்து வெளியேறிய 18,000 லிட்டர்கள் யுரேனியம் - ஒரு வரலாற்றுச் சம்பவம்!!

அணு உலையில் இருந்து வெளியேறிய 18,000 லிட்டர்கள் யுரேனியம் - ஒரு வரலாற்றுச் சம்பவம்!!

4 புரட்டாசி 2018 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 18336


Tricastin Nuclear Power Plant அணு உலை நிலையம் Lapalud நகரத்தையும் Bollène நகரத்தையும் இணைத்துக்கொண்டு பரந்து விரிந்துள்ளது. 
 
இந்த Tricastin அணு ஆலையில், 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒருநாள் மிகப்பெரும் விபத்து ஒன்று ஏற்பட்டது. அணு ஆலையில் துப்பரவு பணி இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது, யுரேனியம் அடைத்து வைக்கப்பட்டிருந்த கொள்கலன் ஒன்று தவறுதலாக உடைந்தது. 
 
30 cubic meters (30,000 லிட்டர்கள்) அளவு கொண்ட அந்த இராட்சத கொள்கலனில் இருந்து 18,000 லிட்டர்கள் யுரேனியம் வெள்ளக்காடாக பாய்ந்தது. 
 
வரலாறு காணாத அதிர்ச்சியான விபத்து அது!!
 
யுரேனியம் என்ன செய்யும் என சில நிபுணர்களிடம் கேட்டறிந்தோம். 'ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஓகஸ்ட் 6, 1945 ஆம்  போடப்பட்ட அணு குண்டு  சில நிமிடங்களில் ஒரு மிகப்பெரும் நாச வேலையைச் செய்தது. அந்த அணுகுண்டு... முழுக்க முழுக்க யுரேனியத்தால் செய்யப்பட்டது!' என அதிர்ச்சி தகவல் கிடைத்தது. 
 
ஆனால் நல்ல வேளையாக அவை  பத்திரமாக அகற்றப்பட்டது. பாரிய அளவிலான சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்ற போதும், அங்கிருந்த இரும்புகளையும் கணனி சார்ந்த மின்சாத பொருட்களையும் உருக்கிச் சென்றது. 
 
இந்த விபத்தில், சில அனுபங்களையும் முன்னெச்சரிக்கையும் கற்றுத்தந்துவிட்டு காற்றில் கலந்தது யுரேனியம்!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்