வல்வெட்டித்துறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்
22 மார்கழி 2024 ஞாயிறு 12:04 | பார்வைகள் : 4763
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொன்னாலை வீதியை புனரமைக்கக் கோரி வல்வெட்டித்துறையில் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்திற்கு பின்னர் 30 வருடங்களுக்கு மேலாக வல்வெட்டித் துறையிலிருந்து தொண்டைமானாறு வரையான 12.8 km நீளமான வீதியினை புனரமைக்கக் கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
குறித்த போராட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டு தமது கையொப்பத்தை இட்டுச் செல்கின்றனர்.
இதன்போது எமது வீதி எமக்கானது புதிய அரசே புது வீதி அமைத்ததா?, ஓட்டுக்காக வீடு வந்தவரே வந்த வீதியை மறந்தது ஏன்?, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan