அணு உலைகள் - சில ஆச்சரியத்தகவல்கள்!!
3 புரட்டாசி 2018 திங்கள் 10:30 | பார்வைகள் : 18320
நேற்றைய பிரெஞ்சு புதினத்தில், பிரெஞ்சு தேசம் ஒரு மணி நேரத்துக்கு 546 டெரா வாட் ( 546 TWh ) மின்சாரம் தயாரிக்கின்றது என்று சொன்னோம் இல்லையா... இன்று, பிரெஞ்சு அணு உலைகள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.
இந்த 546 TWh மின்சாரத்தில், அணு உலைகள் மாத்திரம் 76.3 வீதம் மின்சாரத்தை, அதாவது மணிக்கு 416.8 டெரா வாட் மின்சாரத்தை தயாரிக்கின்றது. 76.3 வீதம் என்பது உலகின் மிக அதிகளவான வீதம் ஆகும். (இதில் பெருமைப்பட ஏதும் இல்லை என்பதே உண்மை)
சரி, தயாரிக்கப்படும் மின்சாரங்கள் நம் நாட்டுக்கு மட்டுமா என்றால், அது தான் இல்லை, ஒரு மணிநேரத்துக்கு 45 TW மின்சாரத்தை ஐரோப்பாவின் வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. லக்ஸம்பேர்க் அதில் மிக முக்கியமான நாடு.
பிரான்சில் தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் அணு உலைகள் எல்லாமே 1970 இல் இருந்து 1980 க்கு உள்ளாக கட்டப்பட்டவை. தற்போது அணு உலை கட்டுவது தொடர்பாக பேச்சு எழுந்தாலே பொதுமக்கள் கொடிபிடித்து கிளம்பிவிடுவார்கள்.
தற்போதைய அரசு, 75 வீதத்தில் இருந்து அணு உலைகளுக்கு படிப்படியாக மூடு விழா செய்து, 50 வீதமாக குறைக்க உள்ளதாகவும், இதற்காக 2025 ஆம் ஆண்டு வரை கால எல்லை நிர்ணயித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2017 ஆம் ஆண்டில் அரசு, மின்சார உற்பத்தி மூலம் 3 பில்லியன் யூரோக்களை இலாபமாக சம்பாதித்ததாக தரவுகள் சொல்லுகின்றன.
கடந்த 2008 ஆம் ஆண்டு அணு உலையில் இருந்து 18,000 லிட்டர் யுரேனியம் வெளியேறி விபத்து ஏற்பட்டது..
அது குறித்து நாளை பார்க்கலாம்...!