அங்காடி வாசலில் துப்பாக்கிச்சூடு.. இருவர் பலி!
22 மார்கழி 2024 ஞாயிறு 13:10 | பார்வைகள் : 956
பல்பொருள் அங்காடி ஒன்றின் வாசலில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். Seyne-sur-Mer (Var) நகரில் இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
இரவு 10.30 மணி அளவில் இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. அங்குள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் வாசலில் காத்திருந்த இருவரை நோக்கி ஆயுததாரிகள் சிலர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் 29 வயதுடைய ஒருவரும், வயது குறிப்பிடப்படாத ஒருவரும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர்.
ஆயுததாரிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டு, அவர்கள் வந்தடைந்த போது நிலமை கைமீறிச் சென்றிருந்தது.
சம்பவம் தொடர்பில் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.