விடுதலை-3 படம் உருவாகிறதா?
22 மார்கழி 2024 ஞாயிறு 14:05 | பார்வைகள் : 4865
காமெடியனாக நடித்து வந்த சூரியை தனது ‛விடுதலை' படத்தில் கதையின் நாயகனாக மாற்றினார் இயக்குனர் வெற்றிமாறன். அதையடுத்து தற்போது ‛விடுதலை-2' படத்திலும் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சுவாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். கடந்த 20ம் தேதி திரைக்கு வந்த இந்த படம் பாஸிடிவான விமர்சனங்களை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று திருச்சியில் உள்ள தியேட்டரில் விடுதலை- 2 படத்தை பார்த்துள்ளார் நடிகர் சூரி.
அப்போது அவர் மீடியாக்களை சந்தித்தபோது, ‛‛விடுதலை படத்தைப் போலவே இந்த இரண்டாம் பாகமும் ரசிகர்களுக்கு பிடித்தமான படமாக இருக்கும். திருச்சி மக்களோடு சேர்ந்து படம் பார்க்க வேண்டும் என்பதற்காகவே திருச்சி வந்துள்ளேன். இந்த படத்தை அடுத்து ‛மாமன்' என்ற படத்தில் நடிக்கிறேன்'' என்று கூறிய சூரியிடத்தில், விடுதலை மூன்றாம் பாகம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ‛‛அது குறித்து எந்த முடிவும் இன்னும் எடுக்கப்படவில்லை. மூன்றாம் பாகம் வருமா? வராதா? என்பதை இயக்குனர் வெற்றிமாறன்தான் முடிவெடுப்பார்'' என்று கூறியிருக்கிறார் சூரி.


























Bons Plans
Annuaire
Scan