சூர்யாவின் அதிரடி அறிவிப்பு!
22 மார்கழி 2024 ஞாயிறு 14:29 | பார்வைகள் : 7381
நடிகர் சூர்யா நடித்து கடந்த 10 வருடங்களாக திரைக்கு வந்த எந்தவொரு படமும் வெற்றி பெறவில்லை. குறிப்பாக சூர்யா நடித்து கடைசியாக ‛கங்குவா' படம் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதற்கிடையில் ஓடிடியில் சூர்யா நடித்து வெளிவந்த ‛சூரரைப் போற்று, ஜெய் பீம்' என இரு படங்களும் நல்ல வரவேற்பு பெற்றது.தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா தனது 45வது படத்தில் நடித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு கோவையில் நடைபெற்று வருகிறது. அப்போது 300 ரசிகர்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து ரசிகர்களிடம் போட்டோ எடுத்து அவர்களிடம் உரையாடினார். அப்போது சூர்யா கூறியதாவது, "எனது ஒவ்வொரு படம் வெளியீட்டிற்கான இடைவெளி அதிகமாக உள்ளது. இது உங்களுக்கு வருத்தமாக இருக்கும். இனிமேல் ஒரு வருடத்திற்கு இரண்டு படங்கள் வெளியாகும் என உறுதியாக சொல்கிறேன்" என இவ்வாறு சூர்யா உறுதியாக பேசியதால் ரசிகர்கள் உற்சாகமாக இது குறித்து பகிர்ந்து வருகின்றனர்


























Bons Plans
Annuaire
Scan