அஜித் படத்தை இயக்கப் போகிறாரா வெங்கட் பிரபு?
22 மார்கழி 2024 ஞாயிறு 14:37 | பார்வைகள் : 217
நடிகர் அஜித் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்த தகவல்கள் அஜித் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இருவரும் இணைந்து மங்காத்தா என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த நிலையில் மீண்டும் இவர்கள் இணைவார்களா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.
துணிவு படத்திற்கு பின்னர் அஜித் குமார் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் சில மாதங்களுக்கு முன்னரே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் தவிர்க்க முடியாத காரணங்களால் ஷூட்டிங் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இந்நிலையில் இம்மாத இறுதியுடன் ஷூட்டிங் முழுமையாக நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே ஒரே நேரத்தில் அஜித் குமார் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய 2 திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களை தொடர்ந்து அவர் சில காலம் கார் ரேஸில் பிஸியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் அவர் பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் இணைவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த இயக்குனர் வெங்கட் பிரபு மங்காத்தா படத்துக்கு பின்னர் அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு சிலமுறை கிடைத்ததாகவும் இதனை தவற விட்டதால் அஜித் தன் மீது கோபத்தில் இருக்கக்கூடும் என்றும் கூறினார். மேலும் அஜித்துடைய போனுக்கு வெயிட் பண்ணுவதாகவும் வெங்கட் பிரபு தெரிவித்தார்.
அஜித் மற்றும் வெங்கட் பிரபு இணைந்து மங்காத்தா என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தனர். இந்த காம்போ எப்போது இணையும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு கடைசியாக இயக்கிய தி கோட் என்ற திரைப்படம் 450 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது என்பது கவனிக்கத்தக்கது.