Paristamil Navigation Paristamil advert login

ரஷ்யாவிற்கு எதிராக  உக்ரைன் நாட்டின் திட்டம்...

ரஷ்யாவிற்கு எதிராக  உக்ரைன் நாட்டின் திட்டம்...

22 மார்கழி 2024 ஞாயிறு 14:57 | பார்வைகள் : 5539


ரஷ்யாவிற்கு எதிராக அடுத்தடுத்த தாக்குதல்களைத் திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார்.

உக்ரைன் தயாரித்துள்ள ஆயுதங்களை அதிகரித்து ரஷ்யாவிற்கு எதிராக பயன்படுத்தத் துவங்கியுள்ளது.

இது, உக்ரைனின் மக்களுக்கு எதிராக பயங்கர தாக்குதல்களை மேற்கொள்கின்ற ரஷ்ய இராணுவத் தளங்களை மற்றும் உள்கட்டமைப்புகளை குறிவைத்துத் தாக்குவதற்கான நடவடிக்கையாக உ செலன்ஸ்கி தெரிவித்தார்.

தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் நகரில், சனிக்கிழமை ஒரு புற்றுநோய் மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது.


அதிர்ஷ்டவசமாக நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றார் ஜெலன்ஸ்கி.


கடந்த வாரம் மட்டும் ரஷ்யா 550 glide குண்டுகள், 550 போர் ட்ரோன்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் உக்ரைனில் தாக்குதலுக்கு பயன்படுத்தியதாக ஜெலன்ஸ்கி தனது X பதிவில் தெரிவித்தார்.

சமீபத்தில் உக்ரைன், தனது எல்லையிலிருந்து 1,100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரஷ்யாவின் மாபெரும் நகரமான காசான் மீது ட்ரோன் தாக்குதலை நடத்தியது.

உயரமான குடியிருப்பு கட்டடங்கள் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், அங்குள்ள இராணுவ இலக்குகள் குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

மூன்று ஆண்டுகளாக தொடரும் ரஷ்யாவின் வரையறுக்கப்பட்ட தாக்குதல்களுக்கிடையில், உக்ரைன் தனது ஆயுதங்களை மேம்படுத்தி, அதில் மேற்கத்திய ஆயுதங்களையும் சேர்த்து தாக்குதல்களை அதிகரித்துள்ளது.

முக்கிய இராணுவ தளங்கள், வழங்கல் வழிகள் மற்றும் தொழில்துறை நிலைகள் தாக்குதலுக்குள்ளாகின்றன.

இந்த நடவடிக்கைகள், உக்ரைனின் தற்காப்புத் திட்டங்களை வலுப்படுத்தும் முயற்சியாக அமைந்துள்ளதுடன், தொடர்ந்தும் இந்த பிரச்சனைகள் தீவிரமாகும் சூழல் நிலவுகிறது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்