Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் செல்பி எடுக்கச் சென்ற தாயும் மகளும் பலி

இலங்கையில் செல்பி எடுக்கச் சென்ற தாயும் மகளும் பலி

22 மார்கழி 2024 ஞாயிறு 16:04 | பார்வைகள் : 3110


அநுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வந்த மகளும் தாயும் செல்ஃபி எடுக்கச் சென்ற போது ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரத்தினபுரி பிரதேசத்தில் இருந்து அனுராதபுரத்திற்கு வந்த இவர்கள், அனுராதபுரம் நிலையத்திற்கு அருகில் காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதிவேக ரயிலின் முன் செல்ஃபி புகைப்படம் எடுக்க முற்பட்டபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

வர்த்தக‌ விளம்பரங்கள்