நடுத்தர பிரிவில் அசத்த காத்திருக்கும் Vivo Y300 ஸ்மார்ட்போன்: கசிந்த முக்கிய அம்சங்கள்

18 கார்த்திகை 2024 திங்கள் 09:09 | பார்வைகள் : 3653
Vivo தனது புதிய ஸ்மார்ட்போனான Y300-ஐ இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.
Y300 தொடர்பான வடிவமைப்பு மற்றும் திறன் குறித்த கசிவுகள் வெளியான நிலையில் Y300 நடுத்தர பிரிவில் சிறந்த போட்டியாளராக உருவாக தயாராக உள்ளது.
Y300 ஸ்மார்ட்போன் துடிப்பான பச்சை-நீலம், கவர்ச்சிகரமான ஊதா மற்றும் ஸ்லீக் டைட்டானியம் ஆகிய 3 ஸ்டைலான வண்ண விருப்பங்களில் வரவுள்ளது.
ஸ்மார்ட்போனின் திரையை பொறுத்தவரை 6.67-இன்ச் முழு HD+ காட்சியுடன் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் வரக்கூடும்.
Y300 ஸ்மார்ட்போன் Snapdragon 4 Gen 2 சிப்செட்டில் செயல்படுகிறது.
இது அதிகபட்சமாக 12GB RAM மற்றும் 512GB சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 5,000mAh பற்றரி திறன் ஆனது 80W வேகமாக சார்ஜ் செய்யும் திறனுடன் வழங்கப்படுகிறது.
Y300 ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி சென்சார் மற்றும் 8MP இரண்டாம் நிலை லென்ஸை கொண்ட இரட்டை கேமரா அமைப்பை கொண்டிருக்கும்.
அத்துடன் 32MP செல்பி கேமராவும் இணைக்கப்பட்டுள்ளது.
Y300 ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனருடன்(in-display fingerprint scanner) பயோமெட்ரிக் பாதுகாப்பை வழங்கும்.
கூடுதலாக, Wi-Fi, Bluetooth மற்றும் பல போன்ற பல்வேறு அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
Vivo அதிகாரப்பூர்வமாக Y300 இந்தியாவில் நவம்பர் 21, 2023 அன்று பிற்பகல் 12 மணி IST க்கு வெளியிடப்படும் என்று உறுதிப்படுத்தியுள்ளது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1