Paristamil Navigation Paristamil advert login

வரவுசெலவு 2025 : ஊழியர்களுக்கான பணிநேரம் அதிகரிப்பு.. €2 பில்லியன் சேமிக்க திட்டம்!

வரவுசெலவு 2025 : ஊழியர்களுக்கான பணிநேரம் அதிகரிப்பு.. €2 பில்லியன் சேமிக்க திட்டம்!

18 கார்த்திகை 2024 திங்கள் 10:36 | பார்வைகள் : 2078


2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் €10 பில்லியன் யூரோக்கள் வரை சேமிக்க அரசு திட்டமிட்டுள்ள நிலையில், பல்வேறு நலத்திட்டங்களில் கைவைத்துள்ளது. பெரு நிறுவனங்களுக்கான வரி 20% சதவீதமான அதிகரிப்பு, மாகாண சபைகளுக்கு சிறப்பு அதிகாரங்கள் என பல்வேறு வழிகளில் இந்த சேமிப்பை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

அதன் ஒரு அங்கமாக பெரும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களது பங்கும் இருக்கவேண்டும் என அரசு கோரியுள்ளது. முதலில் €4 பில்லியன் யூரோக்கள் அவ்வாறு சேமிக்க முடியும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த தொகை €2 பில்லியனாக குறைக்கப்பட்டுள்ளதக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஊழியர்கள் மேலதிக நேரம் பணிபுரிய வேண்டும் எனவும், அவர்களது வருமானத்தை அதிகரிக்கவும், வரி செலுத்துவதை அதிகரிக்க அது ஒன்றே வழி எனவும் வரவுசெலவுத்திட்ட அமைச்சர் Laurent Saint-Martin தெரிவித்தார். 'நாம் சமூக பங்களிப்புக்கான உழைப்பை மேற்கொள்ளுவதில்லை' என அவர் மேலும் தெரிவித்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்