விண்வெளியில் உள்ள சுனிதா வில்லியம்ஸின் புதிய புகைப்படம்

18 கார்த்திகை 2024 திங்கள் 13:58 | பார்வைகள் : 3475
கடந்த ஜூன் மாதம் நாசா மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல் காரணமாக பூமிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, விண்வெளியில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸின் உடல் எடை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது என்றும், மன அழுத்தத்தில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
குறித்த தகவலை மறுத்த நாசா, சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள அனைத்து விண்வெளி வீரர்களுக்கும் வழக்கமாக மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.
அவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட அனைவரும் நலமுடன் உள்ளனர் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் விண்வெளியில் சிக்கித் தவிக்கும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் புதிய படத்தை நாசா சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது.
அதில், சுனிதா ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் குழு விண்கலத்தில் ஜன்னலுக்கு வெளியே எட்டிப்பார்த்து பூமியை எட்டிப்பார்க்கிறார். இதன்மூலம் சுனிதா வில்லியம்ஸ் நலமாக உள்ளார் என்பது தெரிகிறது.
முன்னதாக, சுனிதா தனது எடை குறைப்பு குறித்த வதந்திகளை மறுத்து, நான் இங்கு வந்தபோது என்ன எடை இருந்தேனோ அதே எடையில் இருக்கிறேன் என்று கூறி இருந்தார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3