Paristamil Navigation Paristamil advert login

தொலைதூரக் காதலில் உங்க துணையை மகிழ்ச்சியாக வைத்திருப்பது எப்படி ?

தொலைதூரக் காதலில் உங்க துணையை  மகிழ்ச்சியாக வைத்திருப்பது எப்படி ?

18 கார்த்திகை 2024 திங்கள் 14:29 | பார்வைகள் : 149


பொதுவாக காதலர்கள் அருகில் இருந்தாலே சண்டை வராமல் இருக்காது. இதில் உங்கள் காதலன்/காதலி தொலைவில் இருக்கும் போது உங்களுக்குள் எவ்வித சண்டையும் வரமால் உறவை சீராக கொண்டு செல்வது என்பது சற்று சவாலான விஷயம் தான். இதற்கு நீங்கள் ஒரு சில விஷயங்களில் கவனம் செய்தாலே போதும் உங்கள் துணை உங்கள் மீது பாசமழை பொழிவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதுகுறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

 சர்ப்ரைஸ் கொடுங்கள் : உங்கள் காதலன்/காதலி தொலைவில் இருந்தால் பிறந்தநாள், உங்கள் காதலை கூறிய நாள் என ஏதேனும் ஒரு விசேஷமான நாளன்று மறக்க முடியாத வகையில் நேரில் சென்று அவருக்கு சர்ப்ரைஸ் கொடுங்கள். இது நீங்கள் அவரை எந்த அளவுக்கு விரும்புகிறீர்கள் என்பதையும், அவர்கள் மீதான உங்கள் அக்கறையையும் காட்டுவதற்கான சிறந்த வழியாகும்.

 விர்ச்சுவல் டின்னர் : நீங்கள் தூரத்தில் இருக்கும் போது ஒன்றாக சேர்த்து வெளியே சென்று சாப்பிட முடியாது என்றாலும் விர்ச்சுவல் டின்னர் ஒன்றை அரேஞ்ச் செய்யலாம். இருவரும் சேர்ந்து முன்கூட்டியே தேதியைத் திட்டமிட்டு ஒன்றாக போனில் கனெக்ட் செய்து விரச்சுவல் டின்னர் சாப்பிட்டு மகிழலாம். இது நீங்கள் இருவரும் அருகில் இருப்பதாக உணர வைக்கும்.

 பிளேலிஸ்ட்களை பரிமாறிக்கொள்ளுங்கள் : பிளேலிஸ்ட்களை பரிமாறிக்கொள்வது அன்பைக் காட்டுவதற்கான மற்றொரு வழியாகும். உங்கள் துணையிடம் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் பிளேலிஸ்ட்களை உருவாக்கி அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இது இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற உணர்வை தரக்கூடியது.

பாராட்டு : பாராட்டு எப்போதும் சிறியதல்ல. உங்கள் காதலன்/காதலியை அடிக்கடி பாராட்டுவதை வழக்கமாக வைத்து கொள்ளுங்கள். ஒரு சிறிய நல்ல விஷயத்தை கூட பாராட்டி சப்போர்ட் செய்வது அவர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
விளம்பரம்

 பரிசு : உங்கள் காதலன்/காதலிக்கு பரிசு கொடுத்து அவர்களை ஆச்சரியப்படுத்துங்கள். இது அவர்களை தனிச்சிறப்பாகவும், அன்பாகவும் உணர வைக்கும். அவர்கள் நீங்கள் நாட்களாக வாங்க வேண்டும் என நினைத்து கொண்டிருக்கும் பொருள் அல்லது அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி கொடுத்து, மகிழ்விக்கலாம்.

 பார்ட்டி : உங்கள் துணை தூரமாக இருந்தாலும் பார்ட்டி டேட் இரவுகளை திட்டமிடுங்கள் . நீங்கள் உங்கள் அறைகளை ஒரு திரையரங்கமாக மாற்றி, பாப்கார்னுடன் திரைப்பட இரவுகளை அனுபவிக்கவும். அதே நேரத்தில் உங்கள் துணை தொலைவில் இருந்தாலும் அவரும் இதேமாதிரி செட்டப் செய்து வீடியோ கால் வாயிலாக இருவரும் பேசி மகிழலலாம்.

காதல் கடிதங்கள் : தற்போது பலரும் தங்கள் துணைக்கு எண்ணற்ற பரிசு பொருட்களை வாங்கி கொடுத்து கவர்கிறார். ஆனால் நம் கைகளிலும் எழுதி கொடுக்கும் க்ரீட்டிங் கார்டு, காதல் கடிதங்களுக்கு எப்போதும் மவுசு அதிகம். எனவே வாழ்த்து மடல்கள், காதல் கடிதங்கள் போன்றவற்றை உங்கள் கைப்பட எழுதி கொடுத்து அன்பை பரிமாறி கொள்ளுங்கள்

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்