Besançon : போதைப்பொருட்கள், €616,000 யூரோக்கள் பணம் மீட்பு!!
18 கார்த்திகை 2024 திங்கள் 17:16 | பார்வைகள் : 800
2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இடம்பெற்று வந்த விசாரணைகளை அடுத்து, மிகப்பெரிய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது, 2.9 கிலோ எடையுள்ள கொக்கைன், 875 கிராம் எடையுள்ள கெரோயின் மற்றும் €616,000 யூரோக்கள் பணம் ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றினார். அத்துடன் 32 வயதுடைய ஒருவரையும் கைது செய்தனர்.
இந்த நடவடிக்கை சென்ற ஆண்டு ஆரம்பித்திருந்தது. 2023 ஆம் அண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி அன்று காவல்துறையினர் அப்பகுதியில் போதைப்பொருள் விறனையில் ஈடுபட்ட இருவை காவல்துறையினர் கைது செய்திருந்தனர். அவர்களிடம் போதைப்பொருள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதில், மேற்படி கடத்தல் குழு தொடர்பில் தெரியவந்துள்ளது.