Paristamil Navigation Paristamil advert login

15 ஆண்டுகால காதலனை திருமணம் செய்யப் போகும் கீர்த்தி சுரேஷ்...

15 ஆண்டுகால   காதலனை  திருமணம்  செய்யப் போகும்  கீர்த்தி சுரேஷ்...

19 கார்த்திகை 2024 செவ்வாய் 04:39 | பார்வைகள் : 4062


நடிகை கீர்த்தி சுரேஷ் 15 ஆண்டுகாலம் பழகிய பாய் பிரண்டை திருமணம் செய்ய போவதாகவும், அடுத்த மாதம் இந்த திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ் என்பதும், இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘ரிவால்வர் ரீட்டா’, 'கன்னிவெடி' மற்றும் அட்லி தயாரிப்பில் உருவான பாலிவுட் திரைப்படமான 'பேபி ஜான்' ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து இந்த மூன்று படங்களும் ரிலீஸ் ஆக உள்ளன.

இந்த நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது 15 ஆண்டுகால நண்பரை திருமணம் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது. அவர் அந்தோணி என்பவரை திருமணம் செய்ய போவதாகவும், துபாயை சேர்ந்த தொழிலதிபரான இவர் கீர்த்தி சுரேஷின் சிறுவயது முதல் நண்பர் என்றும் கூறப்படுகிறது.

இந்த திருமணம் டிசம்பர் மாதம் கோவாவில் நடைபெற இருப்பதாகவும், மிகவும் எளிமையாக நெருங்கிய குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இந்த திருமணத்தில் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. சரியான திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படும் நிலையில், ரசிகர்கள் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்