அமெரிக்க ஏவுகணைகள் மூலம் ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்தப்படும்! பைடன் அனுமதி
19 கார்த்திகை 2024 செவ்வாய் 08:52 | பார்வைகள் : 462
ரஷ்யா நடத்தும் தாக்குதலுக்கு உக்ரைன் பதில் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
ரஷ்யா மீது தாக்குதல் மேற்கொள்வதற்கு அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரேன் பயன்படுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அனுமதி வழங்கியுள்ளதாக அமெரிக்கா உறுதி செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நடவடிக்கையானது அமெரிக்க கொள்கையின் முக்கிய மாற்றமாக கருதப்படுகின்றது.
அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகளை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறு உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி கடந்த பல மாதங்களாக கோரிக்கை விடுத்திருந்தார்.
ஏடிஏசிஎம்எஸ் எனப்படும் ஏவுகணைகள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் ரஷ்ய எல்லைகளுக்கு அப்பால் ஏவுகணை பயன்பாட்டிற்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.