Paristamil Navigation Paristamil advert login

வெறும் 45 நிமிடத்தில் டெல்லியில் இருந்து அமெரிக்காவுக்கு செல்ல முடியும்! எலான் மஸ்க்கின் புதிய பயணத் திட்டம்

வெறும் 45 நிமிடத்தில் டெல்லியில் இருந்து அமெரிக்காவுக்கு செல்ல முடியும்! எலான் மஸ்க்கின் புதிய பயணத் திட்டம்

19 கார்த்திகை 2024 செவ்வாய் 09:56 | பார்வைகள் : 176


எலான் மஸ்க் ஒரு மணி நேரத்தில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் புதிய  போக்குவரத்து தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஒரு மணி நேரத்திற்குள் வேறு ஒரு நாட்டை அடைய கூடிய புதிய போக்குவரத்து முறையை எலான் மஸ்க் தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூல உருவாக்கியுள்ளார்.

எலான் மஸ்க்கின் இந்த திட்டம் குறித்து, டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இன்ஜினியர் அலெக்ஸ் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில், வரவிருக்கும் அதிக வேக ராக்கெட்டுகள் சுமார் 27,000 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து, குறிப்பிட்ட இடத்தை சில நிமிடங்களில் அடைகின்றனர்.

உதாரணமாக, நியூயார்க்கில் இருந்து ஷாங்காய் செல்ல 30 நிமிடங்களும், டெல்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோ செல்ல 45 நிமிடங்களும் போதுமானது என வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய போக்குவரத்து முறை, விமானப் பயணத்தை விட பல மடங்கு வேகமாக இருப்பதால், உலகின் எந்த மூலையிலும் உள்ள நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை எளிதாக சந்திக்க வழிவகுக்கிறது.

அத்துடன் இந்த திட்டம் உலக பொருளாதாரத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எலான் மஸ்க் தனது இந்த திட்டம் குறித்து, இது இனிவரும் காலங்களில் சாத்தியமாகும் என தெரிவித்துள்ளார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்