Mercosur : பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு அழைப்பு!!
19 கார்த்திகை 2024 செவ்வாய் 11:24 | பார்வைகள் : 519
ஐரோப்பாவில் இருந்து லத்தீன் அமெரிக்காவுக்கான சுதந்திர வர்த்தக ஒப்பந்தமான 'Mercosur' இனை பிரான்ஸ் தொடர்ந்து எதிர்பதாக ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தில் இணைவதா வேண்டாமா என்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் வாக்கெடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.
ஐரோப்பா ரீதியில் பல்வேறு நாடுகள் பிரான்சுடன் இணைந்து அதனை எதிர்த்து வருகிறது. ஐரோப்பாவில் இருந்து லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு மேற்கொள்ளப்படும் இந்த வர்த்தகத்தினால் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் பெரிதளவில் பாதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஜனாதிபதி மக்ரோனின் இந்த மறுப்பு கருத்தை பல்வேறு அரசியல் தலைவர்கள் வரவேற்றுள்ளதுடன், பாராளுமன்றத்தில் இது தொடர்பில் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.