பனிப்பொழிவு.. இல் து பிரான்ஸ் மாகாணம் உட்பட 28 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
20 கார்த்திகை 2024 புதன் 12:48 | பார்வைகள் : 8196
இன்று முதல் இந்த பருவகாலத்துக்கான பனிப்பொழிவு ஆரம்பமாகிறது. நாளை வியாழக்கிழமை இல் து பிரான்ஸ் உட்பட 28 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
நவம்பர் 20 ஆம் திகதி இன்று புதன்கிழமை மாலை இல் து பிரான்ஸ் உட்பட சில பகுதிகளில் பனிப்பொழிவு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டு ‘மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, நாளை நவம்பர் 21 ஆம் திகதி வியாழக்கிழமை காலை முதல் பெரும் பனிப்பொழிவு ஒன்றுக்கு நாடு தயாராகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் பரிஸ் உட்பட இல் து பிரான்ஸ் மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பனிப்பொழிவு பதிவாகும் என தெரிவிக்கப்பட்டு காலை 6 மணி முதல் அங்கு ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவற்றுடன் Aube, Yonne, Haute-Marne, Côte-d'Or, Côtes-d'Armor, Vosges, Haute-Saône, Doubs, Territoire de Belfort, Haut-Rhin, Calvados, Eure, Eure-et-Loir, Ille-et-Vilaine, Loir-et-Cher, Loiret, Manche, Mayenne, Orne, Sarthe மற்றும் Seine-et-Marne ஆகிய 28 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நன்றி : meteo france


























Bons Plans
Annuaire
Scan