ஒலிம்பிக் தீபம் ஏலத்துக்கு வருகிறது!!
20 கார்த்திகை 2024 புதன் 17:45 | பார்வைகள் : 2021
இம்முறை இடம்பெற்ற பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக 2,000 ஒலிம்பிக் தீபம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த தீபத்தில் ஒன்று டிசம்பர் மாதம் ஏலத்துக்கு வருகிறது.
ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னர் நாடு முழுவதும் ஒலிம்பிக் தீபங்கள் கொண்டுசெல்லப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட 10,000 பேர் இந்த ஒலிம்பிக் தீபத்தினை சுமந்திருந்தார்கள். இதற்காக ஒரே மாதிரியான 2,000 ஒலிம்பிக் தீபங்கள் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த தீபத்தில் ஒன்று Normandie நகரில் ஏலத்துக்கு வருகிறது. Beaussant Lefèvre எனும் நிறுவனம் இதனை ஏலத்துக்கு விடுகிறது.
இது 20,000 தொடக்கம் 25,000 வரை ஏலத்தில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
ஏலம் இடம்பெறுவதற்கு முன்பாக இம்மாதம் 25 ஆம் திகதி முதல் Caen நகரில் இந்த தீபம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.