Paristamil Navigation Paristamil advert login

விஜய் கட்சியை குறைவாக மதிப்பிடவில்லை: செந்தில்பாலாஜி

விஜய் கட்சியை குறைவாக மதிப்பிடவில்லை: செந்தில்பாலாஜி

21 கார்த்திகை 2024 வியாழன் 03:49 | பார்வைகள் : 289


என்ன ஓட்டு வங்கி இருக்கிறது என்று தெரியாதபோதிலும், யாரையும் குறைவாக மதிப்பிடவில்லை,'' என, கோவையில் தமிழக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, நடிகர் விஜய் பெயரை குறிப்பிடாமல் கூறினார்.

கோவையில் ரூ.9.67 கோடியில் செயற்கை புல்வெளியுடன் கூடிய ஹாக்கி மைதானம் அமைக்கப்படுகிறது.

இவ்விடத்தை தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று பார்வையிட்ட பின் கூறியதாவது:

ஹாக்கி மைதானம் பணிகள், 2025 ஏப்ரலில் முடிக்கப்படும். ரூ.935 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை பணி நடக்கிறது. விரைந்து முடிக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். ரோடு போடுவதற்காக, 200 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. சாலைக்கான பட்டியல் தயாரித்து, அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெற்று, விரைவில் அப்பணிகள் துவக்கப்படும். பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தும் பகுதியில் ரோடு போடவில்லை; அத்திட்ட பணி முடிந்ததும் ரோடு போடப்படும்.

திட்டங்களை புறநகர் பகுதிக்கு கொண்டு சென்றால், வசதி குறைவாக இருக்குமென பொதுமக்கள் நினைக்கின்றனர்; அவர்களது வசதிக்காக நகர்ப்பகுதியில் அமைக்கப்படுகிறது; சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் துவங்கும். மின்சாரத்துறை சார்பில் கொள்முதல் செய்யப்படும் அனைத்து உபகரணங்களும் 'ஆன்லைன்' முறையில் டெண்டர் விடப்படுகிறது. கடந்த காலங்களில் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ, அதே நடைமுறையே பின்பற்றப்படுகிறது. தவறு நடைபெறவில்லை.

இவ்வாறு, அவர் கூறினார்.

நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலளிக்கையில், ''நான் யாரையும் குறைவாக மதிப்பிடவில்லை; யாரையும் குறைவாக சொல்லவில்லை ,'' என்றார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்