Paristamil Navigation Paristamil advert login

புயல் + பனிப்பொழிவு : 52 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

புயல் + பனிப்பொழிவு : 52 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

21 கார்த்திகை 2024 வியாழன் 06:54 | பார்வைகள் : 766


இன்று நவம்பர் 21, வியாழக்கிழமை சீரற்ற காலநிலை நிலவும் என எச்சரிக்கப்பட்டு நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு வானிலை அவதானிப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Caetano என பெயரிடப்பட்ட புயல் இன்று கரையைக் கடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Finistère, Morbihan, Loire-Atlantique, Vendée, Deux-Sèvres, Charente-Maritime, Gironde, Charente, Vienne, Haute-Vienne, Creuse, Allier, Puy-de-Dôme, Loire, Rhône, Isère, Ain, Savoie மற்றும் Haute-Savoie ஆகிய 19 மாவட்டங்களில் புயல் வீசும் . அதிகபட்சமாக மணிக்கு 130 கி.மீ வேகத்தில் புயல் வீசலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பனிப்பொழிவு காரணமாகவும் பனிப்புயல் காரணமாகவும் 33 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் இல் து பிரான்சின் அனைத்து மாவட்டங்களும் உள்ளன. Côtes-d'Armor, Ille-et-Vilaine, Calvados, Eure, Manche, Orne, Mayenne, Sarthe, Eure-et-Loir, Loir-et-Cher, Loiret, Aube, Yonne, Haute-Marne, Côte d'Or, Vosges, Haute-Saône, Doubs, Territoire de Belfort, Haut-Rhin, Paris, Seine-et-Marne, Yvelines, Essonne, Hauts-de-Seine, Seine-Saint-Denis, Val-de-Marne, Val-d'Oise, Seine-Maritime, Alpes de Haute-Provence, Hautes-Alpes, Nièvre மற்றும் Cher ஆகிய மாவட்டங்களில் பனிப்பொழிவு பதிவாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்