Paristamil Navigation Paristamil advert login

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் நடந்தது என்ன ?

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் நடந்தது என்ன ?

21 கார்த்திகை 2024 வியாழன் 11:15 | பார்வைகள் : 190


தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் உள்ளனர். தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 20 ஆண்டுகால திருமண உறவில் இருந்து விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக்கோரி இருந்தனர்.

இருவரும் பிரிவது சரிவராது, இரண்டு மகன்களுக்காவது இவர்கள் சேர்ந்து வாழ வேண்டும் என்று இரு குடும்பத்தாரும் இருவரிடமும் பேசியதாகவும் தகவல் வெளியானது. ஆனால் ஆரம்பத்தில் இருவரிடமும் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை.

தொடர்ந்து விவாகரத்திற்காக இருவரையும் தாக்கல் செய்த மனு முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இரண்டு முறை விசாரணைக்கு வந்தபோதும், நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா வழக்கில் ஆஜராகவில்லை.

இதனால், இருவரும் மீண்டும் சேரப்போகிறார்கள் என்றும் அடுத்த வருடம் ரஜினிக்கு ஒரு விழா நடக்கப்போகிறது என்றும், அதுவே இவர்கள் ஒன்று சேர்வதற்கான தொடக்க புள்ளியாக அமையப்போகிறது என்றும் தகவல்கள் வெளியானது.

இது ஒரு பக்கம் இருக்க இன்ஸ்டாகிராமில் ஐஸ்வர்யா போடும் பதிவுகளுக்கு தனுஷ் சில மாதங்களுக்கு முன் இருந்து லைக் போடத் தொடங்கியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இருவரும் சேரப்போகிறார்கள், அதனால் தான் இருவரும் தங்களது விவாகரத்து வழக்கில் ஆஜராகவில்லை என்றும் கூறிவந்தனர்.

இந்த நிலையில், இன்று வழக்கு விசாரணை மீண்டும் நடந்தது. இதில் தனுஷ் - ஐஸ்வர்யா இருவருமே ஆஜராகினர். இருவரிடமும் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி விசாரணை நடத்தினார். நீதிமன்ற கதவுகள் மூடப்பட்டு இருவரிடமும் ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் இருவருமே பிரிவதில் உறுதியாக இருப்பதாக நீதிபதியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, வழக்கின் தீர்ப்பு தேதியை வரும் 27ம் தேதிக்கு நீதிபதி சுபாதேவி ஒத்திவைத்து உத்தரவிட, தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்