Paristamil Navigation Paristamil advert login

உக்ரைன் மீது  கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதலை நடத்திய ரஷ்யா

உக்ரைன் மீது  கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதலை நடத்திய ரஷ்யா

21 கார்த்திகை 2024 வியாழன் 12:03 | பார்வைகள் : 1861


உக்ரைன் மீதான தாக்குதலின் போது ரஷ்யா கண்டம் விட்டு கண்டம் பாயும் மிக ஆபத்தான ஏவுகணையை ஏவியதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீதான போர் தொடங்கி 1000 நாட்கள் கடந்திருக்கும் நிலையில் முதல் முறையாக ரஷ்யா சக்தி வாய்ந்த, அணு ஆயுதம் பொருத்தக்கூடிய, பல ஆயிரம் கி.மீ தொலைவுக்கு தாக்குதல் இலக்கு கொண்ட ஏவுகணையை வீசியுள்ளது.

எச்சரிக்கைகளை மீறி ரஷ்யாவுக்கு எதிராக பிரித்தானியா மற்றும் அமெரிக்க ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தியுள்ள நிலையிலேயே தற்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் மிக ஆபத்தான ஏவுகணையை ரஷ்யா ஏவியுள்ளது.

மூன்று நாட்களில் உக்ரைனை மொத்தமாக கைப்பற்றும் நோக்குடன் களமிறக்கப்பட்ட ரஷ்ய ராணுவம் 2022 பெப்ரவரி முதல் தற்போது 1000 நாட்களாக போரிட்டு வருகிறது.

மத்திய-கிழக்கு நகரமான டினிப்ரோவில் உள்ள நிறுவனங்கள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பை குறிவைத்து தற்போது ரஷ்ய ஏவுகணை தாக்குதளை முன்னெடுத்துள்ளது.

ஆனால் ICBM பயன்படுத்தும் வகையில் ரஷ்யா என்ன இலக்கை குறிவைத்துள்ளது என்பது உறுதி செய்யப்படவில்லை. ICBM மட்டுமின்றி, கின்சல் ஹைப்பர்சோனிக் ஏவுகணை, Kh-101 ஏவுகணை என தாக்குதலுக்கு ரஷ்யா பயன்படுத்தியுள்ளது.

ICBM பயன்படுத்துவது தொடர்பில் அமெரிக்காவுக்கு ரஷ்யா தகவல் அ:ளித்துள்ளதா என்ற கேள்வியையும் உக்ரைன் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்